16/03/2024
சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
வேதத்தில் உள்ள அதிசயங்கள் என்று நாம் பார்ப்போமானால்
1. உலகத்தின் படைப்பு
2. மனிதனின் படைப்பு
3. தேவனின் இரக்கம்
4. மனிதனின் நித்தியம்
இப்படி காரியங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாம் , அதிசயம் என்பது வியக்க தக்க ஒன்றை சொல்லலாம்,
பிரமிக்க வைக்கும் செயல் ,
உலகத்தின் படைப்பு : தேவன் உண்டாக கடவது என்று சொன்னார் உண்டானது : தேவன் வார்த்தையினால் வானங்களை உண்டாக்கினாரா? ஞானத்தினால் உண்டாக்கினாரா ?
வார்த்தையென்றால் என்ன ? ஞானம் என்றால் என்ன ? என்பதை நாம் கண்டறிய வேண்டும்,
மனிதனின் படைப்பு : தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக தமது சாயலாக படைத்தார் , தேவனுடைய சாயல் என்ன ?
ஏவாளை விலா எலும்பில் இருந்து எடுத்தார், அப்படியானால் ஆதாமின் விலா எலும்பில் ஒன்று குறைவு பட்டதா? மனிதனுடைய இரத்தம் எப்படி 4 வகையாக பிரிக்கப்பட்டது ?
மனிதனின் ஆவி ஆத்துமா சரீரம் என்ன ? எப்படி கண்டறிவது ?
மனிதனின் உறுப்புகள் படைக்கப்பட்ட விதம் அதன் செயல் பாடுகள் அதிசயம்
தேவனின் இரக்கம் : பாவம் செய்த மனிதனை தேவன் இரக்கத்தினால் மீட்டு கொண்டார், அவருடைய பிறப்பு அதிசயம் ,
நம்முடைய தேவன் அதிசயமானவர் மனிதனுக்காக அவர் வைத்திருக்கும் நித்தியம் ஒரு அதிசயம் ,
வேதத்தில் ஒரு வசனம் உண்டு கர்த்தர் சீயோனை கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார் , சீயோன் என்பது என்ன? அதை எங்கே எப்போது கட்டி முடிப்பார் ? எப்படி மகிமையில் வெளிப்படுவார்?
நித்தியத்தை யாரும் கண்டதில்லை மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது . இவைகளையெல்லாம் நாம் கண்டறிய வேண்டுமானால் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும். மாம்ச கண்களால் இவைகளை பார்க்க முடியாது,
தினம் நாம் ஜெபிக்க வேணும் அவருடைய வேதத்தில் உள்ள இரகசியங்களை நாம் காண வேண்டும் தேவன் நமக்கு அதை வெளிப்படுத்துவார்