22/06/2021
கொரோனா தொற்றுக்கு குணமளிக்கும் சித்த மருத்துவம்! மற்றும் குறுமிளகு ரசம். (எங்கள் சுசி உணவகத்தில் இந்த குறுமிளகு ரசம் கிடைக்கும்)
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின் உணவு மற்றும் சில பயிற்சிகள் மூலம் எப்படி இயல்பு நிலைக்கு வருவது எனக் கூறுகிறார், சித்த மருத்துவர் அருள் அமுதன்: கொரோனாவி லிருந்து மீண்ட பிறகும் உடல் சோர்வு, பயம், பதற்றம், தலைச்சுற்றல், நரம்பு மண்டலம் பாதிப்பு, சிந்தனைத்திறன் குறைவு போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.உணவு முறை மாற்றம் மற்றும் சில பயிற்சிகள் மூலம் இதை சரிசெய்ய முடியும். சித்த மருத்துவம் மூலம் பாதிப்படைந்த உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
இந்த சிகிச்சை முறைக்கு, காயகல்பம் என்று பெயர். கொரோனாவுக்கு பிந்தைய காலங்களில் பாதிப்படைந்துள்ள நரம்பு மண்டலத்தை சீர்செய்ய வல்லாரை தான் மிகச் சிறந்த மருந்து. வல்லாரையை துவையல், சட்னியாக செய்து, தினமும் ஒரு வேளை என சாப்பிட்டு வர, இந்த பிரச்னை படிப்படியாக குறையும். வெறும் வல்லாரை இலையை சாப்பிடலாம் என கருதுபவர்கள், மூன்று இலைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்; அதிகமாக சாப்பிட்டால் வேறு பிரச்னைகள் ஏற்படும்.நுரையீரல் தொடர்பான பிரச்னைகளை சீர்செய்ய, பிராணாயாமம் என்ற மூச்சு பயிற்சி உதவும்.
மேலும், நுரையீரலில் சேர்ந்துள்ள பாதிப்பு களை சரிப்படுத்த துளசி, கற்பூரவல்லி, ஆடாதொடை, அதிமதுரம், துாதுவளை, நொச்சி ஆகியவற்றை கொதிக்க வைத்து, ஆவி பிடிக்கலாம்.துாதுவளை லேகியம் மற்றும் திப்பிலி ரசாயனத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி உட்கொள்ளலாம். சோர்வு மற்றும் உடல் வலியை போக்க, முடக்கத்தான் கீரையை பயன்படுத்த வேண்டும். இதை தோசையாகவும் செய்து சாப்பிடலாம். மேலும், வைட்டமின் - டி கிடைக்க, காலையிலும், மாலையிலும் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடமாட வேண்டும். பால், முட்டை ஆகியவற்றுடன், 'ஒமேகா - 3' ஆயில் உள்ள மீன் உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.உடல் வலி அதிகமாக இருந்தால் சிவப்பு குக்கில் தைலம் அல்லது கற்பூராதி தைலத்தை தடவினால், நல்ல குணம் கிடைக்கும்.சிலருக்கு இதயம் படபடப்பு அதிகமாக இருக்கும். அத்தகைய வர்களுக்கு முசுமுசுக்கை தான் கண்கண்ட மருந்து. படபடப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் மல்லி, சீரகத்தை கஷாயமாக காய்ச்சி குடிக்கலாம்.மேலும் முசுமுசுக்கை தோசை சாப்பிடுவதன் மூலமும், முசுமுசுக்கை சூப் அருந்துவதன் மூலமும், சில நிமிடங்கள் தொடர்ந்து பிராணாயாமம் செய்வதன் மூலமும் படபடப்பிலிருந்து மீளலாம்.
முக்கியமாக வாதம், பித்தம், கபம் என மூன்றையும் சமநிலைப்படுத்த குறுமிளகு, மஞ்சள், சோம்பு, சுக்கு, பெருங்காயம், ஏலம், வெந்தயம், பூண்டு என, எட்டு பொருட்களை அரைத்து ரசம் செய்து குடிக்க வேண்டும்!
நன்றி தினமலர்
குறிப்பு : எங்கள் சுசி உணவகத்தில் இந்த குறுமிளகு ரசம் கிடைக்கும்