Nas உலகம்

Nas உலகம் News, sports உலகம் 24/7 update

07/06/2026

அப்படி அவசரமா எங்க தான் போக போறானுங்களோ தெரியா... 🙃

வீடியோ: சம்மாந்துறையில் நேற்று (06) இடம்பெற்ற விபத்து....



07/06/2026

#கல்முனை_வர்த்தக #நிலையத்தில் #பணியாளராக_வேலை #செய்த_இளைஞன்_14 #வயது_சிறுமியை_கடத்தி #பாலியல்_துஸ்பிரயோகம்

செய்தியின் உண்மை தன்மை????
வீடியோ..... எது உண்மை???

06 Jun 2026 வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் வெள்ளிக்கிழமை (05) அன்று குறித்த வழக்கானது மன்றில் விசாரணைக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபரான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி(பாடசாலையை விட்டு இடைவிலகியவர்) தனது தாயுடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ளார்.

இவ்வாறு ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் அங்கு சென்ற சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது.அதன் பின்னர் இருவரும் 2 மாதங்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) தொடர்பில் இருந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை(03) இரவு 11.30 மணியளவில் வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றுடன் தான் பணியாற்றிய ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு 56 வயது மதிக்கத்தக்க நபரையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு சிறுமி தங்கி இருக்கின்ற வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசி ஊடாக அழைத்த அவ்விளைஞன் முகவரி ஒன்றினை காட்டுமாறு கூறியுள்ளார்.அப்போது வீட்டில் இருந்து வீதிக்கு வந்த சிறுமியை சந்தேக நபரான இளைஞன் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயை பொத்தி வேனில் கடத்தி சென்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமி பாழடைந்த வர்த்தக் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சந்தேக நபரான இளைஞன் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

அதன் பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து பின்னர் இரு சந்தேக நபர்களும் மாறி மாறி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அக்கரைப்பற்று பகுதிக்கு அச்சிறுமியை இறுதியாக அழைத்துச் சென்று விட்டுச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் சிறுமி அப்பகுதியால் வருகை தந்த பேரூந்தின் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த விடயங்களை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தினை பெற்ற பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 2 பிள்ளைகளின் தந்தையான 56 வயது மதிக்கததக்க சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்தி செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியின் தாய் மனஅழுத்தம் காரணமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

சுற்றுலா சென்ற இடத்தில் பறிபோன ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 உயிர்கள்..😥😥.....புத்தளம் - நுரைச்சோலை, தலுவா முகத்துவாரப் பகுத...
07/06/2026

சுற்றுலா சென்ற இடத்தில் பறிபோன ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 உயிர்கள்..😥😥.....

புத்தளம் - நுரைச்சோலை, தலுவா முகத்துவாரப் பகுதிக்கு (Daluwa Estuary) சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள், கடலில் ஏற்பட்ட கொடூர நீரோட்டத்தில் சிக்கி பரிதாபமாக #உயிரிழந்துள்ளனர்.

நேற்று (06) சனிக்கிழமை மாலை, விடுமுறையைக் கழிப்பதற்காக தலுவா முகத்துவாரப் பகுதிக்குச் சென்ற போதே இந்த எதிர்பாராத #அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அங்கு நிலவிய மோசமான காலநிலை மற்றும் கடுமையான கடல் நீரோட்டம் காரணமாக, எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் #இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தீவிர தேடுதலின் பின், மூவரின் #உடல்களும் மீட்கப்பட்டு தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

#உயிரிழந்தவர்கள் அனைவரும் புத்தளம் தில்லையடி மற்றும் உமராபாத் பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

18 வயது இளம் பெண், 19 வயது இளம் பெண், 24 வயது இளைஞர் என இளம் வயதிலேயே #துடிதுடிக்க பிரிந்த இந்த #உயிர்களால் ஒட்டுமொத்த புத்தளமே #சோகத்தில் மூழ்கியுள்ளது.

மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

➡➡சுற்றுலா செல்லும் இளைஞர், யுவதிகளே தயவுசெய்து இதை பின்பற்றுங்கள்..👇👇

🛑ஆறும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரப் பகுதிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவை மிகக் #கொடூரமான இழுவை நீரோட்டங்களையும் (Rip Currents), திடீர் ஆழங்களையும் கொண்டவை. வெளியில் நீர் அமைதியாக இருப்பது போல் தெரிந்தாலும், நீருக்கு அடியில் ஆபத்தான சுழல்கள் இருக்கும்.

🛑உள்ளூர் மக்கள் அல்லது பொலிஸாரால் 'ஆபத்தான பகுதி' என எச்சரிக்கப்பட்ட இடங்களில் எக்காரணம் கொண்டும் நீராட இறங்கக் கூடாது.

🛑தற்போது நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கால நிலை நிலவி வருவதால், கடல் வழமைக்கு மாறாகக் கொந்தளிப்புடன் காணப்படும். இத்தகைய காலப்பகுதிகளில் கடற்கரைகள், குளங்கள் மற்றும் ஆறுகளுக்குச் சுற்றுலாச் செல்வதையும், நீர்நிலைகளுக்கு அருகில் நின்று 'செல்ஃபி' (Selfie) எடுப்பதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

🛑பெற்றோர்களே.. உங்களின் பதின்ம வயதுப் பிள்ளைகள் நண்பர்களுடன் சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சுற்றுலாச் செல்லும் போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். ஆபத்தான இடங்களுக்குச் செல்வதைத் தடுத்து எச்சரியுங்கள்.

🛑"எனக்கு நன்றாக நீச்சல் தெரியும்" என்ற அதீத நம்பிக்கையில் ஆபத்தான கடலில் இறங்கக் கூடாது. கடலின் இழுவை விசைக்கு முன்னால் எந்தவொரு சிறந்த நீச்சல் வீரராலும் தப்பிக்க முடியாது

🛑"மகிழ்ச்சியாகக் கழிந்திருக்க வேண்டிய விடுமுறை நாள்... இன்று மூன்று #சடலங்களோடு சோகமாய் முடிந்துள்ளது! இயற்கைச் சீற்றங்களை அலட்சியப்படுத்தாதீர்கள், #உயிரோடு விளையாடாதீர்கள்!"

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்😥😥

#நீரில்மூழ்கிபலி #புத்தளம் #நுரைச்சோலை #முகத்துவாரம் #சுற்றுலாஆபத்து #உயிர்பாதுகாப்பு #விழிப்புணர்வு

07/06/2026

தென் கொரிய நபர் ஒருவர் கர்ப்பிணிப் பெண் போல வேடமணிந்து வட இந்தியாவின் தெருக்களில் நடந்து சென்றார்.

அவரை வட இந்திய ஆண்கள் துன்புறுத்தினர், பின்தொடர்ந்தனர், தொட்டனர் மற்றும் துரத்தினர்.

முற்றிலும் வெட்கக்கேடான செயல்.


#𝐰𝐨𝐦𝐞𝐧𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭

06/06/2026

இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள்..🤷

இடம்  அம்பாரை வீதி அக்கரைப்பற்று..
06/06/2026

இடம்
அம்பாரை வீதி அக்கரைப்பற்று..

IPL அதிரடி காட்டி கலக்கிய சிறுவன் இலங்கையில்..🔥RDICS-ல் நடைபெறவிருக்கும் முத்தரப்புத் தொடருக்காக இந்திய 'A' அணி இலங்கைக்...
06/06/2026

IPL அதிரடி காட்டி கலக்கிய சிறுவன் இலங்கையில்..🔥
RDICS-ல் நடைபெறவிருக்கும் முத்தரப்புத் தொடருக்காக இந்திய 'A' அணி இலங்கைக்கு வந்துள்ளது. 🏏🇮🇳

தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், விறுவிறுப்பாக அமையவிருக்கும் இப்போட்டியில் போட்டியிடவும் தயாராக உள்ளனர். ஆட்டம் தொடங்கட்டும்! 🔥

#

🇦🇪 ஐக்கிய அரபு அமீரகம், “உறுதிமொழி மற்றும் அர்ப்பணிப்பு” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இது, நாட்டின் விழுமியங்களுக...
06/06/2026

🇦🇪 ஐக்கிய அரபு அமீரகம், “உறுதிமொழி மற்றும் அர்ப்பணிப்பு” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இது, நாட்டின் விழுமியங்களுக்குத் தங்கள் விசுவாசம், ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்யுமாறு குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் அழைக்கிறது.

Sign UAE national pledge online: How citizens and residents can join

Link 🔗 1st comment..
Nas உலகம்

🇦🇪 The UAE has launched the “Pledge and Commitment” initiative, inviting citizens and residents to reaffirm their loyalty,

இந்த அர்த்தமுள்ள பிரச்சாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வழிநடத்தும் சொந்தம், சகவாழ்வு மற்றும் நன்றியுணர்வு ஆகிய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டாடுவோம், தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவோம், மேலும் வரும் தலைமுறையினருக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்குப் பங்களிப்போம்.

பெற்றோர்களே சிந்தியுங்கள்..😥 அதி வேகத்தால் பறிபோன 9 வயது மாணவனின் உயிர்..!🔴அவதானமாக பயணிப்ப்போம்🔴  Nas உலகம் அம்பாறை - ப...
05/06/2026

பெற்றோர்களே சிந்தியுங்கள்..😥 அதி வேகத்தால் பறிபோன 9 வயது மாணவனின் உயிர்..!

🔴அவதானமாக பயணிப்ப்போம்🔴
Nas உலகம்

அம்பாறை - பொத்துவில், பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துயரமான விபத்தில், சிறுவன் ஒருவர் பரிதாபமாக #உயிரிழந்துள்ளார்.

தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் சென்றுகொண்டிருந்த போதே, 9 வயதுடைய 'அறூஸ் ஹமூத்' எனும் மாணவன் #அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் #மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து #படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் #உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

↪சாரதிகள் மற்றும் பெற்றோரின் கவனத்திற்கு...👇👇

🛑பள்ளிவாசல்கள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு முன்னால் வாகனங்களைச் செலுத்தும் போது #வேகத்தை முழுமையாகக் குறைக்க வேண்டும் (Speed Limit 20-30 km/h). குறிப்பாக வெள்ளிக்கிழமை மதிய நேரங்கள் மற்றும் விசேட வழிபாட்டு நாள்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து சாரதிகள் அதீத அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

🛑கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பிரதான வீதிகளில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களை அதிக சத்தத்துடன், அதிவேகமாகச் செலுத்துவதை ஒரு பெருமையாகக் கருதுகின்றனர். உங்களின் சில நிமிட 'கெத்து' ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்தக் குலவிளக்கையும் #அணைத்துவிடுகிறது என்பதை மறவாதீர்கள்.

🛑சிறுவர்கள் பிரதான வீதிகள் வழியாகப் பள்ளிவாசல்களுக்கோ அல்லது கடைகளுக்கோ தனியாக செல்லும் போது மிகவும் #கவனமாக இருக்க வேண்டும், பெரியவர் ஒருவர் கூட பயணிப்பது நல்லது.

🛑18 வயதுக்குட்பட்ட, ஓட்டுநர் #உரிமம் இல்லாத ஒரு பிள்ளைக்குத் தெரிந்தே வாகனத்தைக் கொடுக்கும் பெற்றோர் அல்லது வாகனத்தின் ஐதீக உரிமையாளர் (Owner) மீது நீதிமன்றம் மிகக் #கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

🛑உரிமம் இல்லாத சிறுவனால் கொடூர விபத்து அல்லது மரணம் நிகழும் போது, வாகனத்தை அவனிடம் ஒப்படைத்த பெற்றோருக்கும் சேர்த்து பிணையில் வர முடியாத சிறைத்தண்டனை மற்றும் பாரிய #அபராதம் விதிக்கச் சட்டத்தில் இடமுண்டு.

🛑பெற்றோர்களே.. 18 வயது பூர்த்தியாகி, முறையான ஓட்டுநர் பயிற்சி பெற்று, அரசாங்கத்தின் உரிமத்தைப் பெறும் வரை பிள்ளைகளுக்கு வண்டிகளைப் பழக்கவோ, வாங்கிக் கொடுக்கவோ செய்யாதீர்கள்.

''வேகம், சாகசம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் தற்காப்பற்ற ஓட்டங்கள், வீதியில் செல்லும் இன்னும் ஒரு தாயின் #வயிற்றெரிச்சலையும், #சாபத்தையுமே உங்கள் குடும்பத்திற்குப் பெற்றுத்தரும்''

அவதானமாக பயணிப்ப்போம்.. RIP😥😥

#பொத்துவில் #சட்டஎச்சரிக்கை #விழிப்புணர்வு

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கல்முனை மாணவனுக்கு இரண்டாம் இடம் :  12 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இலங்கைக்கு பெ...
05/06/2026

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கல்முனை மாணவனுக்கு இரண்டாம் இடம் : 12 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சாதனை
Follow Nas உலகம்
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

மலேசியாவின் ஹென்டிங் (Genting) நகரில் நேற்று (04) நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கல்முனை மாணவன் முஹம்மட் அனாகித் அம்றி இரண்டு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இச்சர்வதேச போட்டியில், சாய்ந்தமருதில் இயங்கி வரும் தாருல் இல்மு கல்வி நிலையத்தின் ஐகம் அபாகஸ் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முஹம்மட் ஹனீஸ் முஹம்மட் அனாகித் அம்றி (Level-1) தனது திறமையை வெளிப்படுத்தி இந்த சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

கல்முனை – 05, டாக்டர் ரிஸ்வி வீதியைச் சேர்ந்த எம்.எச். முஹம்மட் ஹனீஸ் மற்றும் ஏ.எம். பாத்திமா இன்ஸிரா தம்பதியினரின் புதல்வரான இம்மாணவர், குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச மட்டத்தில் தனது கணிதத் திறனையும் மனக்கணக்குத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

இந்த வெற்றி இலங்கைக்கும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகப் பாராட்டப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர்களின் அறிவாற்றலையும் போட்டித்திறனையும் வெளிப்படுத்தியுள்ள இச்சாதனை, இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக தாருல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வழங்கி வரும் பங்களிப்பு கல்வித்துறையில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

Address

Kalmunai
Saintamaruthu
32280

Alerts

Be the first to know and let us send you an email when Nas உலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share