19/04/2017
மாவடு (வடுமாங்காய் ) ஊறுகாய்
தேவையான பொருட்கள் :
வடுமாங்காய் - 1 கிலோ (உருண்டை வடுதான் நன்றாக இருக்கும் . நீள வடு கசப்புத்தன்மை உடையது )
கல் உப்பு - 200 கிராம்
மிளகாய்த்தூள் – ஒரு பெரிய கரண்டி முழுவதும்
மஞ்சள்தூள் - 1 ½ டீஸ்பூன்
கடுகு - 4 டீஸ்பூன்
மரசெக்கு நல்லெண்ணய் - தேவையான அளவு
செய்முறை :
1.வடுமாங்காய்களை, நன்றாகக் கழுவி , அடியில் ஓட்டைகள் உள்ள கூடையில் போட்டு சாய்த்து வைக்கவும் .
2.அப்போதுதான் , தண்ணீர் நன்றாக வடியும்.
இதை முதல் நாள் இரவே செய்து வைத்து விடவும் .
3.மறுநாள் , அந்த வடுமாங்காய்களை , நல்ல ஒரு காய்ந்த துணி கொண்டு , கொஞ்சமும் ஈரப் பசை இல்லாமல் துடைத்து விடவும் .
4. ஒரு பாத்திரத்தில், மரசெக்கு நல்லெண்ணையை ஊற்றிக் கொள்ளவும் .
5.இதை எடுத்து , துடைத்து வைத்த வடுமாங்காய்களுக்குத் தடவவும் .
6.கடுகை , வெய்யிலில் நன்றாகக் காயவைத்துக் கொள்ளவும் .
7.இப்போது , கடுகை , மிக்சியில் நன்றாக மைய்ய அரைத்துக்கொள்ளவும்.
8.பிறகு அதில் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
9.மிக்சியில் கல் உப்பை , நல்ல பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
10.இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் , கொஞ்சம் மிளகாய்த்தூள், கொஞ்சம் உப்பு (அரைத்தது), கொஞ்சம் கடுகு கரைசல் ,மொத்த மஞ்சள்தூள், இவற்றை போட்டு , அதன் மீது கொஞ்சம் வடுமாங்காய் (மரசெக்கு நல்லெண்ணை தடவியது )இவற்றைப் போடவும் .
11.பிறகு மீண்டும் , அந்த வடுமாங்காய் மீது முன்னர் செய்தது போலவே எல்லா பொருட்களையும் போட்டு , அதன் மீது , வடுமாங்காயைப் போடவும் .
12.இதே போல எல்லா மாங்காய்களையும் போட்டு முடித்து விடவும் .
13.இதை நல்ல ஒரு பெரிய மூடியைப் போட்டு மூடி விடவும் .
14.இதை மறுநாளிலிருந்து , மூடியைப் பிடித்துக்கொண்டு, பாத்திரத்தை, மேலும் கீழுமாகக் குலுக்கி விடவும் .
15.தினமும் இதே போல மறக்காமல் குலுக்க வேண்டும் . ஒரு வாரம் வரை குலுக்க வேண்டும் .
16. புதிதாக செய்பவர்கள் , பாத்திரத்தை தூக்கி குலுக்கத் தெரியாவிட்டால் , ஒரு கரண்டியால் மேலோடு கீழாகக் கலக்கவும் .உப்பு , காரம் எல்லாம் நன்றாக ஒருசேரக் கலக்க வேண்டும் .
17.பின்னர் , சில க்ளாஸ் பாட்டில்களை , நன்றாகக் கழுவி , வெய்யிலில் ஈரம் போக காய வைத்துக் கொள்ளுங்கள் . அதன் மூடிகளும் நன்றாகக் கைய வேண்டும் .
18.பீங்கான் ஜாடிக்களிலும் போட்டு வைக்கலாம் .
19.இந்த பாட்டில்களில் , தயாரான மாவடுக்களை எடுத்துப் போட்டு , ஃபிரிட்ஜில் வைத்து , ஒரு வருடம் வரை உபயோகிக்கவும் .