Faizal Ismail JP

05/06/2021

வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்!
- மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு

பைஷல் இஸ்மாயில் -

திருகோணமலை - கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாத்திரமே கொவிட் 19 இற்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை முறைகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு அது வேறு பிரிவாக இயங்கி வருகின்றன.

வைத்தியசாலையில் வழமையாக இடம்பெற்று வந்த வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் கிசிச்சைகளில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வேறு பிரிவாக பிரிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் யாவும் வேறாக இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வழமையான வைத்திய சேவைகளுக்கும், கொவிட் 19 தொற்று நோயாளிகளின் சிகிச்சைகளுக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லாதவாறே இயங்கி வருகின்றது.

குறிப்பாக, வழமையான வைத்திய சேவைகள் வேறாகவும், கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு அவைகள் வெவ்வேறு தனித்தனி பிரிவுகளாக இயங்கி வருகின்றது. அதனால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை பெற்றுவந்தவர்கள், சிகிச்சை பெற இருப்பவர்கள் தங்களின் சிகிச்சைகளை அச்சம் கொள்ளாமல் வழமை போன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலைமையை கருத்திற் கொண்டு கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதற்காக 0773205168 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்களின் கிளினிக் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தி தங்களுக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17/03/2021
12/01/2021

"மருதமுனை பிரதேச வைத்தியசாலை 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவாக இயங்கும்"

👉 Ahamed Nafais -

மருதமுனை பிரதேச வைத்தியசாலை 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவாக கடந்த (10) ஆம் திகதி முதல் இயங்கி வருவதாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மருதமுனை வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் தூர இடங்களுக்குச் செல்கின்ற எமது தாய்மார்களும் குழந்தைகளும் இந்நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான பராமரிப்பு தேவை முடியும் வரை மருதமுனை காரியப்பர் வீதியிலுள்ள தாய் சேய் நலனோம்பு நிலையத்தில் வைத்தியசாலை இயங்குவதற்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு முன்னரான காலங்களில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் வழமையாக வழங்கி வந்த வெளிநோயாளர் சேவை, பற்சிகிச்சை நிலைய சேவை, ஆரோக்கிய வாழ்வு சிகிச்சை, உள நல வைத்திய சேவை மற்றும் கிளினிக் சேவைகள் போன்ற அனைத்து வைத்திய சேவைகளும் தாய் சேய் நலனோம்பு நிலையத்தில் தொடராக இடம்பெற சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இயங்கி வந்த தாய் சேய் நலனோம்பு சேவையும் அதேபோல்
மக்களைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விடுதியில் நோயாளிகளைத் தரித்து வைத்து சேவை செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்கள் தற்போது இல்லாத போதும் அதன் தேவையினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யக் கூடியதான மாற்றீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய கொரோனா பரவல் அச்ச சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு விடுதி வசதி இல்லாது போனாலும் வருகின்ற நோயாளிகளை திருப்தியோடு சிகிச்சையளித்து அனுப்பி வைக்கும் நோக்கில் 24 மணிநேர சேவையினை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

மிகக் குறைந்தளவான ஆளணியினர் கைவசம் இருந்த போதிலும் சேவை நேரத்திற்கு அதிகமாக வைத்தியசாலையில் தரித்திருக்கக் கூடிய ஒப்புதலை அனைத்து நிருவாகத் தரப்பினரும் தந்திருப்பது சந்தோசத்தை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

10/01/2021

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் ஏ.ஆர்.எம்.தெளபீக் நியமனம்

12/12/2020

Address

Addalachenai
32350

Telephone

94 77 36 511 38

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faizal Ismail JP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faizal Ismail JP:

Share