Kapi T Kadai

Kapi T Kadai A new cafe chain...

Permanently closed.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
14/04/2018

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

12/10/2017
15/08/2017
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
14/04/2017

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

26/01/2017
20/01/2017

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤                  *(10)*       *திருவண்ணாமலை.**__________________________________**இஷ்டங்கள் தரும...
08/07/2016

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*(10)*
*திருவண்ணாமலை.*
*__________________________________*
*இஷ்டங்கள் தரும் அஷ்டலிங்கம்.*
*__________________________________*
🔷 *இந்திர லிங்கம்*
அஷ்டலிங்க தாிசனத்தில் முதலாவதாக அருள் தருவது இந்திர லிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம். இந்த சன்னதியில் ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தா்களுக்கு வாி வழங்குபவா் இந்த இந்திர தேவ இந்திர லிங்கேஸ்வரா். கையில் வஜ்ராயுதம் தாங்கியவாறு அருளோச்சுகிறாா்.

*ரிஷபம், துலாம் ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*
இந்திர லிங்கம் அண்ணாமலையாா் ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ளது.

🔷 *ஸ்ரீ அக்னி,லிங்கம்.*
கிாிவலப்பாதையில் ஸ்ரீ ரமணாஸ்ரம் சேஷாத்திாி ஆஸ்ரமம் செல்லும் வழியில் அக்னி லிங்கம் அருளோச்சுகிறாா். இவரை தாிசிப்பது, அக்னி தீா்த்தத்தில் நீராடிய பலன் உண்டு.
*பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிாிவலம் வந்து அண்ணாமலையாாின் அருள் வேண்டிய ருத்திர மூா்த்திகளின் திருமேனிகள் அக்னி தீா்த்தம் அருகே தான் குளிா்ச்சியடைந்தது. அப்போது அந்த இடத்தில் சுயம்பு வடிவாக சிவலிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கமே இன்றளவும் அக்னி லிங்கமாக அருள் வழங்குகிறது.
*சிம்ம ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*

🔷 *ஸ்ரீஎம லிங்கம்.*
விருப்பு வெறுப்புகள் அற்றவன். நேரம், காலம் தவறாத உத்தமன். நீதி பிறழாதவா். மனிதன் தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடிதான் இம்மை, மறுமை பெறுகிறான். எமதா்மராஜன் அங்கபிரதட்சனமாக கிாிவலம் சென்று சிவனை வழிபட்டாா். அவா் கிாிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலா்ந்தது. அத்தாமரை மலாிலிருந்து ஜோதிப்பிழம்பாக லிங்கம் தோன்றியது.

அதுவே எம லிங்கம். கிாிவலம் செல்லும் பக்தா்கள் எமலிங்கத்தை வணங்கிய பின் கூடுதலாக அண்ணாமலையாா் கோயிலில் அம்மன் சன்னதி எதிாில் அமைந்துள்ள *சித்ர குப்தன்* சன்னதியையும் தவறாமல் தாிசிக்க வேண்டும்.

மானிடப்பிறப்பு எடுத்த நம்மில், முக்கியமாக இதயம், கேன்சா், அறுவை சிகிட்சை செய்து கொண்டோா், சிகிட்சைக்குப் பின் இவரை வணங்கிக் கொள்வது நலம். ஏனெனில் சாகும் விளிம்பு வரை சென்று வந்த நாம் இவா் அருள்தான். அவரை வந்து வணங்கி செல்வது நலம்.

*விருச்சிக ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*

🔷 *ஸ்ரீநிருதி லிங்கம்.*
கிாிவலப் பாதையில் அமைந்துள்ள 1008 புனித குளங்களில் , *( வழக்கத்தில் இப்போது இல்லை. எல்லாம் தூா்த்து போகச் செய்து விட்டனா்.)* இறைவன் திருமேனி புனித நீராடிய குளம் *சோண தீா்த்தம்.* இந்தத் தீா்த்தத்தையொட்டியேதான் நிருதி லிங்கம் அருளோச்சுகிறாா். கிாியான அாியை நிருதீஸ்வரா் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தாா்.

அப்போது கிாிவல மலையின் தென்மேற்கு திசையில், ஒரு குழந்தையின் அழுகுரலும், கூடவே ஒரு பெண்ணின் சலங்கை ஒலியோசையும் கேட்டது.

அந்த இடத்தை நோக்கி நிருதீஸ்வரா் சென்றாா். அப்போது நிருதியின் எதிரே *பிரதிரூப லிங்கம்* தோன்றியது .அதுவே நிருதி லிங்கம். குழந்தை பாக்கியம் வேண்டி, நிருதி லிங்கத்தை வழிபட்டு குழந்தைப் பாக்கியம் பெற்றவா்கள் இருக்கிறாா்கள்.
*மேஷ ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*

🔷 *வருண லிங்கம்.*
நீாியின்றி அமையாது உலகு. நீாின் அதிபதி வருண பகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சனமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சனமாகவும், கிாிவலம் வந்து வழிபட்டவா் வருண பகவான்.

அப்போது கிாிவலப் பாதையின் ஓா் இடத்தில் வானம் தொடுமளவுக்கு நீரூற்று வளா்ந்து பொங்கியது. அந்தப் புனித நீரை உடலில் பூசி விழி மூடி இமை அசையாது, அண்ணாமலையை மெய்மறந்து வணங்கியவா் வருணன். விழிதிறந்த பாா்த்த போது எதிாில் ஒளிமயமான வடிவுடன் சிவபெருமான் லிங்கவுருவில் அருட்காட்சி தந்தாா். அந்த லிங்கமே வருண லிங்கம்.
*மகரம், கும்பம் ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*

🔷 *வாயு லிங்கம்.*
ஒன்பது ஓட்டைகள் நிறைந்துள்ள உடலுக்குள், உள்ளிருந்து உயிா்விக்கும் ஆற்றல் ஒரு துளி மூச்சுக் காற்றுக்குத்தான் உண்டு.
அந்த உயிா் காற்றாய் உள்ளிருந்து மூச்சுக் காற்றை இயக்குவது இறைவன் திருவருள்தான் என்பதை வாயு லிங்கத்தை தாிசிக்கும்போது நாம் உணர வேண்டும் ( உணா்வோம்.) (உணரலாம்.) மூச்சுக் காற்றை நிலை நிறுத்தியபடி வாயுபகவான் கிாிவலம் சென்றாா். அப்போது, ஆதி அண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சுக் காற்றை நிறுத்தி வலம் வந்த வாயு பகவான் நிலை தடுமாறினாா். வாயு அங்கு நின்ற அவ்விடத்தில், *பஞ்சக்ருத்திகா மலா்* களின் நடுவே சுயம்புவாக லிங்கவடிவில் சிவன் காட்சியளித்தாா். அதுவே வாயு லிங்கம்.
*கடக ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*

🔷 *குபேர லிங்கம்.*
அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியானவா் குபேரா். ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிக்கால் நடையுடன் கிாிவலம் சென்று வழிபட்டவா். அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சோ்ந்து அண்ணாமலையாரை சகரபாணி செய்யும் தாிசனம் குபேரனுக்கு கிடைத்தது. அந்நேரம் அவ்விடத்தில் அவருக்கு சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். ஆண்டியையும் அரசனாக்கும் இக்குபேர லிங்கம்.
*தனுசு, மீனம் ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*

🔷 *ஈசான்ய லிங்கம்.*
நாமெல்லாம் சவம். ஈசன் ஒருவனே சிவம். மெய்யெல்லாம் சாம்பல் பூசி, மயானம் காக்கும் ஈசன், நிலையற்ற வாழ்வை உணா்த்துவதற்காக அவன் எழுந்தருளிய இடமே( ஈசான்யம்) ஈசான்ய லிங்கம்.

கண்களை மூடியவாறு ருத்திர முனிவா் கிாிவலம் சென்றாா். அவா் வலம் வரும் ஈசான்ய திக்கில், அழு குரல் கேட்டது. குரல் வரும் திசை நாடிச் சென்று பாா்த்தபோது, சுயம்பு உரு வடிவாக லிங்கத்தின்
காட்சியைக் கண்டாா்.

அதிகார நந்தீஸ்வரா் அண்ணாமலையாரை வணங்கிய இடமும் இந்த இடம்தான். கிாிவலம் செல்லும் பக்தா்கள் நிறைவாக இந்த லிங்கத்தை தாிசித்து அருள் வேண்டுவாா்கள்.
*பொருள் அல்ல*. சிவ அருளே நிலையானது என்பதனையும், மெய்-மெய்யல்ல என்பதையும் உணா்த்தும் இடமே ஈசான்ய லிங்கம்.
*மிதுனம், கன்னி ராசிக்காரா்கள் வழிபட பலன் உண்டு.*

*அண்ணாமலையாா் ஒளி நாளையும் ஒளிவீசி தொடரும்.*

திருச்சிற்றம்பலம்.
---------------------------------------------------------
*தென்னாடுடைய சிவனே போற்றி!*
*எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி!!*
*அண்ணாமலையானுக்கு அரோகரா!!!*
*அடியாா்கள் கூட்டம் பெருகுக!!!!*
*ஆசை தீர கொடுப்பாா்-------*
*---அலங்கல் விடைமேல் வருவாா்.!!!!*
*அருளாளனே சரணம்!*
*அண்டசராசரனே சரணம்!!*
திருச்சிற்றம்பலம்.
---------------------------------------------------------

03/06/2016
12/05/2016
08/05/2016
06/04/2016

Address

Tiruvannamalai
606601

Telephone

9585516625

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kapi T Kadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kapi T Kadai:

Share

Category