06/07/2014
இலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்!
இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது
பொதுவாக வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அந்த சொத்து குறித்தும், முந்தைய உரிமையாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ளவும், அதில் வில்லங்கங்கள் ஏதேனும் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும் வில்லங்கச் சான்று பெறுவர். அதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணமும் செலுத்தி, அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் வில்லங்கச் சான்றினைப் பெற்று வந்தனர்.
வில்லங்கச் சான்று பெற காலதாமதமாவதால் அதனை துரிதப்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, வில்லங்கச் சான்றை விரைவாகப் பெறும் சேவையை துவக்கியது பதிவுத் துறை. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலமாகவோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்தோ இரண்டு நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இடைத்தரகர்களின் குறுக்கீடு அதிகளவில் இருந்தமையாலும், மக்களிடம் உரிய வரவேற்பு இல்லாததாலும் இச்சேவை வெற்றி பெறவில்லை. இவை அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை துவக்கியுள்ளது தமிழக அரசின் பதிவுத்துறை. இதனால் பொதுமக்கள் வில்லங்கச் சான்று பெறுவதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறுவது எப்படி?
தமிழகப் பதிவுத்துறையின் tnreginet.net என்ற இணையதளத்தில் வில்லங்கச் சான்றைப் பார்ப்பதற்கும், பதிவிறக்கம்