13/03/2017
மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 23வது ஆண்டு துவக்கவிழா [ நண்பர்கள் தினம் 2017 ] மற்றும் பேரவைத் தலைவர் மா.கருண் பிறந்தநாள் விழா இன்று (12.03.2017) மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக சென்னை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் தமிழறிஞர் செ.வ. இராமானுஜன் கலந்து கொண்டனர்.
பேரவைப் புரவலர் ம. செல்வராஜ், பேரவைத் தலைமை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன், தமிழர் நலக் கூட்டமைப்பு மகாராஷ்டிரா அமைப்பாளர்கள் இராஜேந்திரன் சுவாமி, கராத்தே முருகன், வெ. குமார், திருமதி. அனிதா டேவிட்,
மும்பை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் புல்வாரியா,
பம்பாய் ஆதிதிராவிட மகாஜன சங்கத் தலைவர் கே.வி. அசோக்குமார்,
பம்பாய் திருவள்ளுவர் மன்ற தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மும்பை புறநகர் தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார்,
மராத்திய மாநில தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் ஜெ. இராஜா இளங்கோ,
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் பேரா. சமீராமீரான்,
தமிழ்ச் சங்கம் பாண்டுப் தலைவர் ச.சி. தாசன், செயலாளர் எஸ். பழனி,பொருளாளர் உ. பூமாரி மற்றும் நிர்வாகிகள்
கல்யாண் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ஹாரிசன் மற்றும் நிர்வாகிகள்,
மராத்திய மாநில தே.மு.தி.க செயலாளர் எஸ். சிவா மற்றும் நிர்வாகிகள்
ஆர்.எஸ். மணி பல்பொருள் அங்காடி நிர்வாக இயக்குனர் இரா. இராமசுப்ரமணியன்
பேராசிரியர்கள் ஈ. குமாரசெல்வன், ஆர். முகேஷ்
கார்ப்பரேஷன் வங்கி மூத்த மேலாளர் எஸ்.ஏ. ராஜ்குமார்
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் டி.எம். ரெம்ஜிஸ், செயலாளர் ஹரிராம்சேட்
மும்பை மாநகராட்சி தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கு. ஆறுமுகப்பெருமாள், ஸ்டீபன் எடிசன், விஷ்வ ஹிந்து பரிஷத் செம்பூர் கிளை பிரமுகர் கா. பொன்ராஜ்
யுவர் டிரீம்ஸ் தலைவர் பா. மாரி
செல்காலனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் வெ.மகாராஜன் மற்றும் ஏராளமான மும்பை தமிழ் பிரபலங்கள் குடும்பத்துடன் கலந்து சிறப்பித்தனர் .
முன்தினத்தில் {11.03.2017} பேரவை சார்பாக இலவச கண் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மும்பை ஆப்கான் ஆலய வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி உறுப்பினர் எம் நார்வேகர் துவங்கி வைத்தார்.இம்முகாமில் 110 பேர் பயன் பெற்றனர். 12.03.2017