Nainar Juice Corner - Madurai

Nainar Juice Corner - Madurai 25 Years Famous Juice Shop In Madurai.Our Shop Famous Is Dry Fruit Milk Shake(மாப்பிள?

மாப்பிள்ளை ஜூஸ்
28/05/2024

மாப்பிள்ளை ஜூஸ்

10/07/2023
New Launch ஜிகர்தண்டா சர்பத் = ரூ 30
07/08/2018

New Launch
ஜிகர்தண்டா சர்பத் = ரூ 30

பால் சர்பத் - Taste Of Jigarthanda( பாதாம் பிசின் + நன்னாரி சர்பத் + பால் கலந்தது)
02/08/2018

பால் சர்பத் - Taste Of Jigarthanda
( பாதாம் பிசின் + நன்னாரி சர்பத் + பால் கலந்தது)

நாளை முதல் பட்டர்புருட் ஜுஸ் ஆரம்பம்Phoenix Imam Amareandra Imam Ali Mohammed Rafiqமதுரை பிலால் MIsc Imam Ali Ilyas Ilya...
02/06/2018

நாளை முதல் பட்டர்புருட் ஜுஸ் ஆரம்பம்
Phoenix Imam Amareandra Imam Ali Mohammed Rafiqமதுரை பிலால் MIsc Imam Ali Ilyas Ilyas

04/05/2017
உடலில் ஊளைச்சதை கூடிவிட்டதா? கரட் சாப்பிடுங்கஅன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கி...
26/05/2016

உடலில் ஊளைச்சதை கூடிவிட்டதா? கரட் சாப்பிடுங்க

அன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

கண் பார்வை அதிகரிக்கும்

கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.
என்றும் இளமையாக

கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.

இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.

மாரடைப்புக்கு குட்பை

கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.

புற்று நோய்க்கு தடை
கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

பள பள பற்கள்

கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.

  அக்னியை எதிர்கொள்ள அசத்தல் ஜூஸ்! -            கோடைக் காலத்தில் வெயிலின் உக்கிரத்தால் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெள...
19/03/2016

அக்னியை எதிர்கொள்ள அசத்தல் ஜூஸ்! -
கோடைக் காலத்தில் வெயிலின் உக்கிரத்தால் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறி, நீர்ச்சத்து குறைந்துகொண்டே இருக்கும். கூடவே சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் சேர்ந்தே வெளியேறும்.
அதை ஈடுசெய்ய, கிர்ணி, தர்பூசணி, திராட்சை போன்றவற்றின் சாறுகளை அருந்தலாம்; இளநீர் குடிக்கலாம். இதில், சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் இழந்த நீர்ச்சத்தைத் திரும்பவும் உடலுக்குத் தர முடியும்.உண்ணும் உணவில்கூட, அதிக அளவு நீர்ச்சத்து உள்ள புடலங்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள்.தாகத்தைத் தணிக்க நீர் மோர் பருகலாம். குழந்தைகளுக்குப் பாதாம் மில்க், ரோஸ் மில்க் போன்றவற்றைக் குளிரவைத்துக் கொடுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், கொய்யா, மாதுளை, தர்பூசணி போன்ற பழங்களை அப்படியே சாப்பிடலாம். வளரும் குழந்தைகள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள், வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் பழச்சாறுகளை அருந்துவதன் மூலம் எப்போதும் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்புடன் இயங்க முடியும்.

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும்...
13/03/2016

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.
எலுமிச்சை, எலுமிச்சங்காய்
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா:
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இஞ்சி:
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

தண்ணீர்:
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

குறிப்பு:
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.

ஜூஸ் செய்யும் முறை:
1 வெள்ளரிக்காய்
5 எலுமிச்சை
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்
வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.
இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

Address

19/A Hayath Khan Street, Near Lucky Travels, Periyar Bustand, Madurai . 1
Madurai
625001

Opening Hours

Monday 7:30am - 11:30pm
Tuesday 7:30am - 11:30pm
Wednesday 7:30am - 11:30pm
Thursday 7:30am - 11:30pm
Friday 7:30am - 12:30pm
2pm - 11:30pm
Saturday 7:30am - 11:30pm
Sunday 7:30am - 11:30pm

Telephone

8526208035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nainar Juice Corner - Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category