05/02/2015
ஆரோக்கிய உணவு : உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் சத்தியம் !!!
இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் குழந்தைகளை ஆட்டிப்படைக்கிறது 'ஆட்டிஸம்' (AUTISM). ஆட்டிஸம் என்பது ஓர் நரம்பியல் கோளாறு (Neurological Disorder). இதனால் குழந்தைகளின் மூளை செயல்பாடுகள் (Brain Function), தகவல் தொடர்பு (Communication Skills) மற்றும் சமூக ஒருங்கிணைப்பு திறன்களும் (Social Interaction Skills) பாதிக்கப்படுகின்றன.
ஒமேகா 3 அமிலங்கள் (Omega-3 Fatty Acids), மெக்னீஷியம் (Magnesium) மற்றும் சின்க் (Zinc) சத்துக்கள் நிறைந்த கடல் உணவுகளை உட்கொள்வதால்
1. கவனக்குறைவு,
2. திடீர் மருட்சி,
3. உணர்வு ரீதியான பிரச்சினைகள்,
4. தூக்கம் தொடர்பான குறைபாடுகள்
ஆகியவை குறைகின்றது. ஆட்டிஸம் சீராகிறது.
30 ஆட்டிஸ்டிக் குழந்தைகள் மீன் உணவுகள் தொடர்ந்து உட்கொண்டனர். அவர்களுள் 66 % குழந்தைகளில் சிறந்த மருத்துவ மற்றும் மனநல முன்னேற்றம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உங்கள் குழந்தைகளின் நம்பிக்கை நீங்கள். அவர்களுக்கான சிறந்த உணவுகளை நீங்கள் தேர்வு செய்யுங்கள் !!!
Source:
1. Lipids Health Dis. 2010;9:105. Epub 2010 Sep 24. PMID: 20868469
2. Clin Biochem. 2008 Sep;41(13):1044-8. Epub 2008 Jun 12. PMID: 18582451
3. Biol Psychiatry. 2007 Feb 15;61(4):551-3. Epub 2006 Aug 22. PMID: 16920077