12/11/2017
இந்திய ரயில்வேயில் 4,950 பணியிடங்கள்
இந்தியா முழுவதும் இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள 4,950 தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,950
காலியிடங்கள் விவரம்:
1. Central Railway - 2,196
2. North Western Railway - 1,164
3. Western Railway - 918
4. North Central Railway - 446
5. NMRCL - 226
மத்திய ரயில்வேயின் நாக்பூர், புனே, சோலாப்பூர், மும்பையில் அளிக்கப்படும் 2196 அப்ரண்டீஸ் பயிற்சியிடங்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த பிரிவுகளில் ஐடிஐ முடித்த இளளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமான ரூ.100-ஐ ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் www.rrccr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வடக்கிழக்கு மத்திய ரயில்வேயிலும் 444 பேருக்கு அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் www.ncr.indianrailway.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து Office of the Divisional Railway Manager, Personnel Dept.(R & D Section), North Central Railway, Jhansi, U.P.-284003 என்ற முகவரிக்கு வரும் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கு ரயில்வே: மேற்கு ரயில்வே ராஜ்கோட்டில் 54 பயிற்சியிடங்கள், மும்பையில் 592 பயிற்சியிடங்கள், பரோடாவில் 43 பயிற்சிடங்கள், வதோதராவில் 229 பயிற்சியிடங்களுக்கும் பயிற்சி அளிக்கப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வடக்கு மத்திய ரயில்வே: வடக்கு மத்திய ரயில்வேயின் ஜான்சியில் 446 பயிற்சியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாக்பூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை:
நாக்பூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள தலைமை திட்ட மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 20 பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்த பட்டதாரிகளிடமிருந்து வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழுமையாக தகவல்கள் அறிய www.metrorailnagpur.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
*Team TNJS*
இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.
Like and join on Facebook
https://www.facebook.com/tnjobsolutions/
மேலும் வேலை வாய்ப்பு செய்திகளை உங்கள் மொபைல் வாட்ஸ் ஆப்பில் பெற 9361911198 இந்த நம்பரை மொபைலில் Job Alerts என்று சேமிக்கவும். பின்பு "add" என்று Whatsapp அனுப்பவும்.
*முக்கிய அறிவிப்பு*
*TNJS யின் மீது ஏதாவது புகார் அல்லது சந்தேகங்கள் இருந்தால் மற்றும் உங்கள் நிறுவனத்தின் வேலை வாய்ப்பை பகிர்வதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.*
🙏நன்றி🙏