Just Bunny

Just Bunny A Mouth watering Fast Food Restaurant being the first of its kind in India. A mouth watering Fast Food Restaurant being the first of its kind in India.

தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாத ஒரு அடல்ட் ஸ்ட்ரீமிங் இண்டஸ்ட்ரி  உருவாகி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பல instagram நடி...
02/11/2025

தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாத ஒரு அடல்ட் ஸ்ட்ரீமிங் இண்டஸ்ட்ரி உருவாகி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பல instagram நடிகைகள் எல்லாம் அதில் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் சமீபத்தில் தம்பதி சமேதமாக நிறைய பேர் அதில் இறங்கி இருக்காங்க. அவர்களின் தினமும் இரவு, பகல் என்று பார்க்காமல் ஸ்ட்ரீமிங் செய்கிறார்கள்‌, இதை செய்ய வேண்டுமா 2000 போடுங்க, இதுக்கு 10000 என்று பேசுகிறார்கள்.

எல்லாமே விளிம்பு நிலை மக்கள்.தினமும் 500- 100‌0க்கு கஷ்டப்படுபவர்கள். சரி, இவங்க எல்லாம் எப்படி இதுல வருகிறார்கள் என்று பார்த்தால் ஏஜெண்ட் மூலமாக சிலர் வருகிறார்கள். என்னது இதற்கு ஏஜென்ட் ஆ என்று ஆச்சரியப்பட்டு விசாரித்துக்கொண்டே சென்றால் அது ஒரு மிக பெரிய வலைப்பின்னல் அமைப்பாக இருக்கிறது.

சரி, இது கொஞ்சம் middle class - high பட்ஜெட். வாரத்திற்கு 3 ஆயிரம் - 5 ஆயிரம் வரை சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு என்று வேற சில ஆப் களை கொண்டு வீடியோ கால் பேசுங்க என்று பல ஏஜெண்டுகள் தமிழ்நாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அதுல பலர் ஏழை கூலி வேலைக்கு செல்லும் பெண்கள். இப்படி ஓர் parallel industry இயங்குகிறது என்று அரசுக்கு தெரியுமா என்று தெரியல.

சென்னை மட்டுமில்லை, பல்வேறு மாவட்ட கிராமத்து கூலி வேலைக்கு செல்லும் பெண்களையும் இந்த நெட்வொர்க் இழுக்கிறது. கேட்டால் வாரம் 4 ஆயிரம் தருகிறார்கள் என்று சொல்கிறார்கள். அனைவருமே மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வருபவர்கள்.

இதுல இல்லாத தமிழ்நாடு மாவட்டம் கிராமம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலை கைமீறி போகிறது.

டிஜிட்டல் literacy மற்றும் இது போல பிரச்சினைகளை பள்ளியில் இருந்தே வகுப்பாக சேர்க்க வேண்டும். மேலும் பல்வேறு விளிம்பு நிலை மக்களுக்கும் இதன் தேவை அதிகரிக்கிறது. எந்த ஒரு ஆப் பெயரை எழுத விருப்பம் இல்லை. ஆனால் பெரிய நெட்வொர்க் ஆக இதுல வருசத்துக்கு 1000 கோடி முதல் 2000 கோடி தமிழ்நாட்டில் மட்டுமே புழங்குகிறது என்பது உண்மை.

18/10/2024
14/01/2024

கடலின் மீது 22 கிலோமீட்டர் தொலைவிற்கு பாலம் போட்டு அதன் மூலம் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு மகாராஷ்டிராவின் தொழில் வளர்ச்சி விரிவுபடுத்தப்படுகிறது. இது போன்ற தொடர் முயற்சிகளால் தான் அது இந்திய ஒன்றியத்தின் கல்லாப்பெட்டியாக இருந்து வருகிறது.

ஆனால் இங்கே பரந்தூரில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கூட அத்தனை முட்டுக்கட்டைகள். உள்கட்டமைப்பு இல்லாவிட்டால் வளர்ச்சி சாத்தியமில்லை. வளர்ச்சி இல்லாவிட்டால் நாம் மற்ற வட மாநிலங்களைப் போல பின்தங்கி விடுவோம். அவர்களுக்கு இருக்கும் எம்பி எண்ணிக்கை நமக்கு கிடையாது.

எனவே நாம் பின்தங்கி விட்டால் மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வரியை நமக்கு தர மாட்டார்கள். நாம் தொடர்ந்து பின்தங்கி கொண்டே இருப்போம்.

by Ravi Senthazal கிச்சான்னாலே இளிச்சவாயன் தானே . Jpeg அல்லது ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ? தொடர் இழை ...
03/04/2022

by Ravi Senthazal

கிச்சான்னாலே இளிச்சவாயன் தானே . Jpeg அல்லது ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ? தொடர் இழை கீச்சு நறுக்குகள்..
முதல் முதலில் நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட எதும் வேறு வேலைகள் செய்தால் இன்னும் கொஞ்சம் சம்பாதித்து கடன்களை எல்லாம் சீக்கிரம் கட்டிவிடலாம் என்ற நப்பாசை 2004 வாக்கில் வந்தது.
2002-3 வாக்கில் நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் அமெரிக்காவில் இருக்கும் கிளையண்ட் பிடிக்க Elance.com ன்ற தளத்தை பயன்படுத்துவார்கள்
அந்த தளத்தில் நானும் ஒரு Freelancer ஆக பதிந்து வைத்திருந்தேன். அதை பார்த்துவிட்டு அமெரிக்காவில் இருந்து ஒரு ஆந்திராக்காரர் அழைத்தார். (தலைப்பை தொட்டுவிட்ட Feeling இப்ப உங்களுக்கு வருதா ?
பை த வே அந்த ஈ லான்ஸ் தளமும் வேறு ஒரு Freelancer தளமும் இணைந்து இப்ப Upwork.com ஆக இருக்காங்க. அப்பவே தினமும் ஆயிரக்கணக்கான பணிகள் எடுக்க முடியும் இப்ப இன்னும் பெரிய தளம் ஆக இருக்காங்க. ஆந்திராக்காரர் விஷயத்துக்கு வரேன்.
அவர் ஒரு பிராஜக்ட் சொன்னார். அதாவது கூகிள் தளம் நாம தேடினால் எப்படி சர்ச் பண்ணி கொடுக்குதோ அதே போல SMS மூலம் ஒரு நம்பருக்கு டெக்ஸ்ட் அனுப்பினால் நாம அனுப்பும் தேடலை டெக்ஸ்ட் வழியாக அதே சானலில் அனுப்பி விட வேண்டும், இலவசமாக.
மிக சேலஞ்ச்ஸ் இருந்தது, கோவை நிறுவனம் உதவியுடன் அதை செய்தோம். முதலில் புரோடோடைப் கொடு, அது வேலை செய்தால் 50000 டாலர் கொடுக்கிறேன் முழு பிராஜக்ட் முடித்து கொடு என்றார்
காதலி கூட மொத்தமா 3 மணி நேரம் நைட்டு பேசினது இல்லை ஆனா அந்த மணவாடு கிட்ட அவ்ளோ பேசி இருக்கேன். கடைசியில் கூகிள் நிறுவனம் ஒரு SMS நம்பர் கொடுத்து இனி நீங்க GOOG என்ற எண்ணுக்கு SMS செய்தால் நாங்களே உங்களுக்கு Search results தர்றோம் என்று சொல்லி விட்டார்கள்.
அதுக்கு அப்புறம் நம்ம கோங்கூரா போன் நம்பர் எப்ப போட்டாலும் எடுக்கல. குறைந்த பட்சம் நாங்க 6 மாதம் பார்த்த பணிகளுக்கு ரேணுகா மெஸ்ல ஒரு புல் மீல்ஸ் சாப்புடுற அளவு கூட காசு கொடுக்கல.
அது ஒரு நல்ல படிப்பினை கொடுத்தது. எந்த பிராஜக்ட் செய்தாலும் 20 சதவீதம் முன்பணம் இல்லாமல் செய்ய முடியாது என்று சொல்லி விடுவேன். உன்னால முடியல என்றால் வேற ஆள பாத்துக்க. உனக்கு இலவசமா வேலை செய்வதை விட நான் ரெண்டு பழைய ரஜினி படம் பார்ப்பேன் போங்கடா என்று சொல்லி விடுவேன்.
இணையத்தில் பணிகள் இருக்கா ? மெய்நிகர் (Virtual) பணிகள் செய்து நிறைவாக பணம் சம்பாதிக்க இயலுமா ? என்றால் முடியும். 100 சதவீதம் வெற்றிகரமாக பணியாற்ற முடியும். ஆனால் சரியான அணுகுமுறை வேண்டும்.
இணையத்தில் இருக்கும் இளித்த வாயர்களை குறி வைத்து பல பல கும்பல்கள் இயங்கும் இந்த காலத்தில் அவர்கள் உங்கள்
1. உழைப்பை சுரண்டுவார்கள்
2. ஆசை காட்டி பணம் பறிப்பார்கள்.
3. உங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்
இதை எல்லாம் மீறி தான் உங்கள் சரியான அணுகுமுறை வெற்றி பெற வேண்டும்
உழைப்பு சுரண்டல்.
நீ வேலை செய், அப்புறமா காசு தரேன். இது ஏமாற்று வேலை. வேண்டாம் என மறுத்து விடுங்கள்.
நான் வேற ஆளுக்கு இந்த வேலைகளை கொடுத்து விடுவேன் என்று சொன்னால் தாராளமாக கொடுத்து கொள் என தைரியமாக சொல்லவும்.
ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டைகள்.
டேட்டா எண்டரி ஜாப், தினம் 100 டாலர், அல்லது இன்டெல் மைக்ரோ சாப்ட் டெஸ்லா ஷேர் 50 சதவீத கழிவில் வாங்கி தருகிறேன் என்பது..
பிட் காயின், ஷேர் மார்க்கெட், MLM மோசடிகள்.
உழைக்காமல் பணம் வருகிறது என்று ஒருவர் சொன்னால் அது 100 சதம் பொய்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி, இணையம் மூலம் சம்பாதிக்கும், வீட்டில் இருந்தே தனக்கான வேலையை செய்து சம்பளம் வாங்கும் பல வேலைகள் உண்டு, பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் இன்னும் உண்டு.
வைகை புயல் வடிவேலு சொல்வது போல எதையும் பிளான் பண்ணி பண்ணனும். என்ன வகையான பணிகள் இருக்கிறது என்பதை முழு லிஸ்ட் நான் தருகிறேன். அதில் உங்களுக்கு எது சரியானதாக இருக்கும் என்பதை முதலில் திட்டம் செய்ய வேண்டும்.
மிக எளிதாக கிடைக்க கூடியவை மொழிபெயர்ப்பு பணிகள். (உதா Proz.com தளத்தில் உங்களை பற்றி சொல்லி ரெஜிஸ்டர் செய்தால் பல நிறுவனங்கள் உங்களை தேடி வரும்.
Virtual Assistant என்பது ஒரு மெய் நிகர் உதவியாளர் பணி. இதை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
இந்த VA என்பது மிக முக்கியமான பணியில் இருப்பவர் ஒருவர் தனக்கு சில பணிகள் மட்டும் (டிக்கெட் புக் செய்வது, அப்பாயின்மெண்ட் ஷெடியுல் செய்வது போன்ற பணிகளை இணையத்தில் அவுட் சோர்ஸ் செய்து விடுவார்கள். அதன் மூலம் அவர் தன்னுடைய பிற பணிகளில் கவனம் செலுத்தலாம்.
அவர் தனக்கு தனியாக ஒரு உதவியாளரை நியமித்து கொள்வதை விட இந்த VA ஆக இணையத்தில் யாரையாவது நியமித்து கொள்வது மிகவும் cost efficient. ஆகவே இந்த பணி பல ஆண்டுகளாக Freelance VA என ரொம்ப பாப்புலர் ஆக இருக்கு. (எந்த வேலையை தேடுகிறீர்கள் என்ற புரிதல் இருந்தா இணைய பணி பிடிப்பது ரொம்ப எளிது.
ஒரு பிரீலான்சர் தளத்தில் இருந்து பணிகளை எடுக்கும் போது உங்கள் பணிகளை பற்றிய எடுத்துக்காட்டுகளை சொல்லி, உண்மையிலேயே நீங்க செய்த பணிகளை காட்டி, கேட்கலாம்.
ஆரம்பத்தில் செய்யும் பிராஜக்ட் சிலவற்றை சல்லிசான விலையில் செய்து கொடுத்து நிறைய reference வாங்கி பல கிளையண்டுகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அதன் பின் பெரிய பிராஜக்டுகள் அதுவே வரும்.
வேலை தேடுவது ஒரு கலை என்று சொன்னேன் அல்லவா, அதே போல் பிராஜக்ட் எடுப்பது ஒரு கலை. உங்கள் மீதான அதீத நம்பிக்கை தான் உங்களை நம்பி ஒருவர் ஒரு தொழிலை கொடுக்க காரணமாக இருக்க முடியும். அப்படியான நம்பிக்கையை உங்கள் பணிகள் மூலமும், பேசும் விதம் மூலமும் தான் நீங்க வெளிக்காட்ட முடியும்.
அந்த காலத்தில் மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் நிறைய செய்தார்கள், இப்ப இருக்கா என தெரியவில்லை, எளிதாக கிடைக்கும் பணிகள் வெப் டிசைன், லோகோ டிசைன், கண்டன்ட் ரைட்டிங், மொபைல் அப்ளிக்கேஷன் டெவலப்மெண்ட் போன்றவை.
சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட், SEO, wordpress, payment collection போன்ற பணிகளும் நிறைய இருக்கு.
சில சரியான காண்டாக்ட் கிடைத்தால் நமக்கான பணியை உருவாக்கி கூட தருவார்கள் (எங்க CMS ஐ நீங்க மெயின்டெய்ன் பண்ண முடியுமா) வேலை தேடும்போது எப்படி நெட்வொர்க் பண்ணுங்க நெட்வொர்க் பண்ணுங்க என்று சொல்லி அடித்து கொள்கிறோனோ அதே போல் நெட்வொர்க் மூலமே பல Freelance வொர்க் கிடைக்கும்.
வேலை தேட சிறப்பான வழி நாலு பேரிடம் நீங்க வேலை தேடி வருகிறீர்கள் என்று சொல்வது. அது இணைய பணிக்கும் பொருந்தும். உங்கள் புரோபைலில் (LinkedIn, Twitter, Instagram and Facebook) நீங்க ஒரு Freelancer, இந்த இந்த வகையான பணி (ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு, அகாடமி Writing) என போடலாம்.
and I am not a big fan of Share Market, Bitcoin, NFT kind of Investments. உழைக்காமல் வரும் எந்த பணத்தையும் நான் பரிந்துரைக்க விரும்பல. இது எனது தனிப்பட்ட முடிவு, பல்லாயிரக் கணக்கான பேர் இயங்கும் துறையை பற்றி என்னுடைய கருத்தை வைக்க விரும்பவில்லை. (லாட்டரி கூட அப்படித்தான அல்லவா)
உங்களுக்கு என ஒரு சொந்த இணைய தளம் இருப்பது நல்லது. அது வேர்ட்பிரஸ், பிளாக்கர், மீடியம் (medium.com) என இலவச இணைய தளம் ஆக இருந்தால் கூட பரவா இல்லை, அல்லது சொந்த இணைய தளம் ஆக (உங்கள் பெயருடன்) இருந்தால் கூட நல்லது. அதில் உங்களை பற்றிய விவரம், படங்கள் இருத்தல் நலம்.
உங்களது பிராஜக்ட் பலவற்றை அதில் போட்டு வைக்கலாம், உங்களது சமூக வலைத்தளத்திற்கு இணைப்புகள் கொடுக்கலாம், நீங்கள் பேசும் சில வீடியோக்கள் கூட அதில் காண கிடைக்கலாம். இப்படியாக நீங்க உங்கள் வலைதள பார்வையாளர்களிடம் உங்களைப் பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.
முக்கியமாக இணையத்தில் பிசினஸ் மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில், உதா Linkedin or Twitter, சில முக்கிய சொற்களை தேடல் செய்து கொண்டே இருக்க வேண்டும். "Looking for a freelancer" என்று தேடினால் Freelancers தேடும் சில தொழில் முனைவோர் பதிவுகள் கண்ணில் மாட்டும். கப்புனு பிடிக்கணும்.
இன்னும் பல நுணுக்கங்கள் இருக்கு, அது போக போக நீங்களே கண்டறிய முடியும். சொல்ல வந்த கருத்து, சிறப்பான இணைய பணிகள் நிறைய இருக்கு, சரியான அணுகுமுறை மூலம் நீங்கள் அதனை எடுத்து செய்யலாம் என்பதே.
ஏற்கனவே சொன்னது போல உங்கள் சமூக வலைதள கணக்குகளை "ஆச்சாரமாக" வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம். (Without any graphic content, இரத்தம், வன்முறை etc etc). ஒரு வாடிக்கையாளர் அதையும் பார்த்து தான் உங்களிடம் பணிகளை கொடுப்பார்.
வாடிக்கையாளர்களின் பட்டியலை தனியாக சேகரிப்பது, அவர்களிடம் தொடர்ந்து நல்லமுறையில் தொடர்பில் இருப்பதும், ரொம்ப முக்கியமானது. ஒரு திட்ட பணி முடிந்த பிறகு அவருடன் உங்களுக்கு "ஸ்னானபிராப்தி" இல்லை என்று போக கூடாது. Connect with your customers continuously.
இந்த செய்திகளை எல்லாம் உள்வாங்கி உங்களாலும் இணையம் மூலம் நல்ல பணிகளை எடுத்து செய்ய முடியும், வீட்டில் இருப்பதால், மற்றவரை போல தினம் அலுவலகம் போகும் சூழல் இல்லாமல் இருப்பதால் நீங்க ஒன்றும் குறைந்து போய்விட வில்லை என்பதை நீங்க உணர்ந்தா அது எனக்கு போதும்.. இனிய வாழ்த்துக்கள்!!!
விடுபட்டவை #1: வாடிக்கையாளரிடம் உரையாடும்போது கடினமான சொற்களை பயன்படுத்த கூடாது. (rude). மிக தன்மையாக, பணிவான வார்த்தை பயன்பாடு முக்கியம்.
விடுபட்டவை #2: உங்கள் தேவைகளை முன்பே சொல்லி அனுமதி பெறலாம், யாரும் தவறாக எண்ண மாட்டார்கள். எனக்கு மாதத்தில் 25 ஆம் தேதியன்று பணிக்கான தொகையை அனுப்பி விடுங்கள். என்பது போல.
விடுபட்டவை #3: முக்கிய காரணம் ஏற்பட்டால் ஒழிய, தனிப்பட்ட உரையாடல்களை இணைய வாடிக்கையாளர்களிடம் தவிர்க்க வேண்டும். வேலை என்றால் வேலை.
விடுபட்டவை #4: Freelance Writing போன்ற பணிகளுக்கு ஒரு கட்டுரைக்கு 8 அமெரிக்க டாலர் வரை. ஒரு மணி நேரத்துக்கு 10 அமெரிக்க டாலர் வரை. டெலி காலிங் 10 டாலர் முதல் 20 டாலர் வரை. one off Jobs 50 - 100 முதல், 500 USD வரை (Development Jobs) வாங்கலாம். check rates in Upwork.
விடுபட்டவை #5 : நிறைய தளங்களில் DISPUTE MANAGEMENT இருக்கு. அதனால் தைரியமாக இறங்கலாம். ஒரு மத்தியஸ்த கணக்குக்கு பணம் போகும், வேலை நடக்க நடக்க பணம் ரிலீஸ் ஆகும்.
விடுபட்டவை #6: பிரிலான்ஸ் என்பதும் உங்களுக்கான வரவு, அதற்கும் முறையாக Declare செய்து இன்கம் டாக்ஸ் கட்ட வேண்டும், நினைவில் கொள்க.
விடுபட்டவை #7: Freelancer.com ஒரு நல்ல தளம், பல ஆண்டுகளாக மார்கெட்ல இருக்கு. நான் நிறைய பணிகளை அவுட் சோர்ஸ் செய்து இருக்கேன்.
விடுபட்டவை #8: fiverr.com ஒரு தளம், நான் நிறைய UX Related பணிகளை அவுட் சோர்ஸ் செய்து இருக்கேன்.

Upwork connects businesses with independent professionals and agencies around the globe. Where companies and freelancers work together in new ways that unlock their potential.

எல்லாரிடமும் ஏக்கப் புலம்பல் கதை ஒன்று  இருக்கும். "1980ல ஒரு கிராமத்துல வெறும் இருபதாயிரம் ரூபாய்க்கு இரண்டு கிரவுண்டு ...
19/03/2022

எல்லாரிடமும் ஏக்கப் புலம்பல் கதை ஒன்று இருக்கும்.

"1980ல ஒரு கிராமத்துல வெறும் இருபதாயிரம் ரூபாய்க்கு இரண்டு கிரவுண்டு வாங்கிப்போட சொல்லி தலப்பாடா அடிச்சுக்கிட்டான் என் ஃபிரண்டு. நான் கேட்கல. சொன்னா, நம்ப மாட்டீங்க. அந்த கிராமம் தான் வேளச்சேரி."

"2007ல தேவை இல்லாம, நல்லா இருந்த பைக்க வித்துட்டு புதுசா ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக் வாங்குனேன். அதுக்கு பதிலா அந்த பைக் பண்ற ஐஷர் கம்பெனி ஷேர் வாங்கிப் போட்டிருந்தா இந்நேரம் கோடி ரூபா அக்கவுண்ட்ல இருந்திருக்கும்."

இப்படி எதாவது ஒன்று.

அது போன்ற வாழ்க்கையையே மாற்றும், நீண்ட காலத்திய 'thousand bagger' (ஆயிர மடங்கு வளரும்) முதலீடு செய்யவெல்லாம் தொலை நோக்குப் பார்வை வேண்டும்; முதலீடு செய்யும் நேரத்தில் அந்த பார்வை இல்லாதவர்களின் கேலி, கிண்டல், கேள்விகளைக் கண்டு கொள்ளாத திடம் வேண்டும்; முதலீடு செய்த பணத்தைச் செலவு செய்து உடனே அனுபவித்திருக்கக்கூடிய பலன்களை அனுபவிக்காமல் காத்திருக்க அசாத்திய பொறுமை வேண்டும்.


Address

Jayanagar 4th Block
Bangalore

Alerts

Be the first to know and let us send you an email when Just Bunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Just Bunny:

Share