Ancient Delicacy

Ancient Delicacy Crunchy Appalam and Vadam's at your Door steps. There is no Indian meal platter without crunchy appalam and vadam.

our kitchen queens and killadi's often prefer these yummy titbits to replace vegetables when the regular meals starts boring. As a kid,some of us have seen how our grand mother's and mothers make appalams, vadams and vathals during summer time.. Now a days we miss all the fun as well as such a homely divine pappads which are not available everywhere and that too at our convenience. All you have to

do is , place your order and its our job to deliver the most yummy and traditional appalams which will rejuvenate your taste-buds. Not only that, it will also bring back your childhood memories that are buried deep inside. Our goal is to nurture and promote our traditional authentic goods and make it available to everyone around the globe.

கோதுமை ரவை குக்காசம்பா கோதுமை ரவை - 1 டம்ளர் பச்சைப் பட்டாணி - 1 கப் பெரிய வெங்காயம் - 2 பெரிய பூண்டுப் பற்கள் - 5 பச்சை...
11/12/2015

கோதுமை ரவை குக்கா

சம்பா கோதுமை ரவை - 1 டம்ளர்
பச்சைப் பட்டாணி - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய பூண்டுப் பற்கள் - 5
பச்சை மிளகாய் - 6
முந்திரி - 5
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
புதினா இலை - 1 பிடி
பிரிஞ்சி இலை - 2
தேங்காய் பால் - 2 டம்ளர்
தண்ணீர் - 2 டம்ளர்
நெய் - சிறிது
ஆயில் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ரவையை நெய்விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும், பிறகு குக்கரில் கொஞ்சம் ஆயில் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும். பிறகு முந்திரி, புதினா இலை, இஞ்சி பூண்டு விழுது, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி இவைகளைப் போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் ரவை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடிவிடவும். 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். (மிதமான தீயில் இதை செய்யவும்) சிறிது நேரம் கழித்து சிறிதளவு நெய் விட்டு கிளறி உருளைக்கிழங்கு குருமாவுடன் இதை பரிமாறவும்.

உணவுப் பழக்கத்தில் தமிழர்களின்ரசனையே தனி...பண்டைக்காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையானஉணவுப்பழக்கங்கள் இருந்திருக்கின்றன எ...
11/12/2015

உணவுப் பழக்கத்தில் தமிழர்களின்
ரசனையே தனி...
பண்டைக்
காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான
உணவுப்
பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்..
இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப்
பழக்கம்
உள்ளவர் என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள்..
1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக
சாப்பிடுவது.
2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.
3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த
உணவை ஈர்த்து உண்ணுதல்.
4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க
உறிஞ்சி உட்கொள்ளுதல்.
5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக
கடித்துச்
சாப்பிடுதல்.
6 . துய்த்தல் --
உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
7 . நக்கல் -- நாக்கினால் துழாவித்
துழாவி உட்கொள்ளுதல்.
8 . பருகல் -- நீர் கலந்த
பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
9 . மாந்தல் -- ரொம்பப் பசியால்
மடமடவென்று உட்கொள்ளுதல்.
10 . கடித்தல் -- கடினமான உனவுப்
பொருளை கடித்தே உண்ணுதல்.
11. விழுங்கல் -- வாயில்
வைத்து அரைக்காமல்
அப்படியே உள்ளே தருள்ளுவது
12. முழுங்கல் -- முழுவதையும்
ஒரே வாயில்
போட்டு உண்பது.

தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை!!! 1. உப்பு (Salt)2. ஊறுகாய் (Pickles)3. சட்னி பொடி (Chutney Powder)4. பச...
10/12/2015

தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை!!!
1. உப்பு (Salt)
2. ஊறுகாய் (Pickles)
3. சட்னி பொடி (Chutney Powder)
4. பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad)
5. பருப்பு கூட்டு (Bengal Gram Salad)
6. தேங்கய் சட்னி (Coconut Chutney)
7. பீன்… பல்யா (Fogath)
8. பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath)
9. சித்ரண்ணம் (Lemon Rice)
10. அப்பளம் (Papad)
11. கொரிப்பு (Crispies)
12. இட்லி (Steamed Rice Cake)
13. சாதம் (Rice)
14. பருப்பு (Dal)
15. தயிர் வெங்காயம் (Raitha)
16. ரசம் (Rasam)
17. உளுந்து வடை (Black Gram Paste Fired Cake)
18. கத்திரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
19. இனிப்பும் புளிப்பும் கலந்த கூட்டு (Sweet And Sour Gravy)
20. காய்கறி பொரியல்(Vegetable Fry)
21. காய்கறி அவியல் (Vegetabel Mix)
22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
23. கத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
24. இனிப்பு (Sweet)
25. வடைகறி (Masalwada Curry)
26. இனிப்பு தேங்கய் போளி (Sweet Coconut Chapati)
27. கிச்சடி (Vegetable Upma)
28. இஞ்சி துவையல் (Sour Ginger Gravy)
29. பாயசம் (Sweet)
30. தயிர் (Curds)
31. மோர் (Butter Milk

பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்புபேபி கார்ன் - 10 வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்வெங்காயம் - 1 தக்காளி - 1பூண்டு - 4 பல்...
10/12/2015

பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு

பேபி கார்ன் - 10
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
புளி - எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 2
சாம்பார்பொடி - 2 டீ ஸ்பூன் (காரத்திற்கேற்ப)
நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
அரிசி ஊறிய நீர் - 1 கப் (குழம்புக்கு தேவையான அளவு)
தேங்காய்ப்பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைத்துக் கொள்ளவும் அல்லது தேங்காய் துருவல் இருந்தால் அதிலிருந்து கெட்டியான பால் அரை கப் எடுத்துக் கொள்ளவும். தக்காளியுடன் சாம்பார் தூளை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். புளியை அரிசி ஊற வைத்த நீரில் போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பிறகு வேர்க்கடலை மற்றும் நறுக்கின பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி விடவும். ஒரு கொதி கொதித்ததும் நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி

ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்ஓட்ஸ் - 1 கப் ரவை - 1/4 கப் கடலைமாவு - 1/4 கப் மோர் - 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு) கேரட் - 2 டேப...
06/12/2015

ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

ஓட்ஸ் - 1 கப்
ரவை - 1/4 கப்
கடலைமாவு - 1/4 கப்
மோர் - 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
முட்டைகோஸ் - 2 டேபிள் ஸ்பூன்
குடமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
முந்திரி பருப்பு(பொடித்தது) - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணை - சுடுவதற்கு
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஓட்ஸையும், ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து வைக்கவும். கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மெல்லியதாக அரிந்து வைக்கவும். தேங்காயை துருவி கொள்ளவும். மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வறுத்த மாவு கலவைகளை ஒன்றாக உப்பு போட்டு கலக்கவும். அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் போடவும். கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் கலக்கவும். ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்தவுடன், சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

மஷ்ரூம் சூப்உணவுப் பாதையில் உள்ள கசடை சரி செய்து ஜீரணதுக்கு உதவும் பெஸ்ட் அபிடைசர்,சூப் . சூப்புனாலே மஷ்ரூம் சூப்புக்குத...
05/12/2015

மஷ்ரூம் சூப்

உணவுப் பாதையில் உள்ள கசடை சரி செய்து ஜீரணதுக்கு உதவும் பெஸ்ட் அபிடைசர்,சூப் . சூப்புனாலே மஷ்ரூம் சூப்புக்குத்தான் தனி மவுசு. சுவை மட்டுமில்லாமல், அதிக சத்து இருக்கிறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி!

தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் மஷ்ரூம் - 3
எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
மைதா - 1-1/2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன்
சோளமாவு - 2 டீ ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* சோள மாவு, மிளகுத் தூளை தனித்தனியே சிறிது தண்­ணீரில் கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மைதா மாவைப் போட்டு வறுத்து, மூன்று கப் தண்ணீ­ர் விட்டு கொதிக்க விடவும்.

* இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய மஷ்ரூமை போட்டு நன்றாக வெந்ததும் கரைத்த சோளமாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவு

முடக்கத்தான் தோசை!தேவையான பொருட்கள்:புழுங்கல் அரிசி - 1 கப் முடக்கத்தான் இலை - 2 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன்செய்முறை:* அரி...
04/12/2015

முடக்கத்தான் தோசை!

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்
முடக்கத்தான் இலை - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும்.

* மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம்.

* மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும்.

* மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும்.

* இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி - இரண்டுமே நன்றாக இருக்கும்.

இதன் சிறப்பு:

* வாத நோய் வராமல் தடுக்கிறது.

* பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது.

* சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

கருணைக்கிழங்கு மசியல்தேவையான பொருட்கள்:பழைய கருணைக்கிழங்கு - 1/2 கிலோதக்காளி - 2புளி - சிறிதளவுமஞ்சள்தூள் - 1 டீ ஸ்பூன்ம...
03/12/2015

கருணைக்கிழங்கு மசியல்

தேவையான பொருட்கள்:

பழைய கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
தக்காளி - 2
புளி - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1-1/2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துறுவல் - 4 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* கருணைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து மசித்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் புளிக்கரைசலை விட்டு, அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தக்காளி, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். (புளிக்கரைசல் தண்ணியாக இல்லாமல் ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்)

* பின்பு மசித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்க்கவும்.

* பின்பு தேங்காய்த்துறுவல் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* சுவையான கருணைக்கிழங்கு மசியல் ரெடி.

சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது.

Curry Leaves Riceதேவையான பொருட்கள்:சாதம் - 2 கப்கறிவேப்பிலை - ஒரு கப்நல்லெண்ணை - 1 டீ ஸ்பூன்கடலைப்பருப்பு - 1/2 டீ ஸ்பூன...
02/12/2015

Curry Leaves Rice

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
கறிவேப்பிலை - ஒரு கப்
நல்லெண்ணை - 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
வர மிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எலுமிச்சை - 1/4 பழம்
நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுகலாக வறுத்து, மைய பொடித்துக்கொள்ளவும்.

* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

* பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.

* பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

* அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.

* பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.

* பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

* இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும்.

* முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்.

கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்கார்ன் - 1 கப்ஓட்ஸ் - 1/2 கப்பிரெட் துண்டுகள் - 3மசாலா தூள் - 1/2 டீ ஸ்பூன்உப்பு = சிறிதிளவுஎண்ணைய் ...
01/12/2015

கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்

கார்ன் - 1 கப்
ஓட்ஸ் - 1/2 கப்
பிரெட் துண்டுகள் - 3
மசாலா தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு = சிறிதிளவு
எண்ணைய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கார்னை தனியாக வெட்டிக் கொள்ளவும். (அல்லது Frozen கார்ன்கூட பயன்படுத்தலாம். (Fresh Corn என்றால் நல்லா இருக்கும்.)

* ஓட்ஸினை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அத்துடன் பிரெட் துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* கார்னினை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கார்ன், பொடித்த ஓட்ஸ், பிரெட் துண்டுகள், மசாலா தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையினை விரும்பிய வடிவத்தில் தட்டி ட்ரேயில் வைத்து கொள்ளவும்.

* அவனை 400 F-ல் மூற்சூடு செய்து கொள்ளவும்.

* பிஸ்கட்டுகளை அவனில் 400 F-ல் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

* பிறகு பிஸ்கட்டுகளை திருப்பிவிட்டு மேலும் 7-8 நிமிடங்கள் வேகவிடவும்.

* சுவையான எளிதில் செய்யக்கூடிய ஹெல்தியான பிஸ்கட் ரெடி.

குறிப்பு:

* கார்னில் நிறைய தண்­ணீர் இருப்பதால், தனியாக தண்­ணீர் சேர்க்க தேவையில்லை.

* Whole Grains Bread பயன்படுத்தினால் ரொம்ப நல்லது.

* அவரவர் விருப்பம் போல காரத்தினை சேர்த்து கொள்ளலாம்.

முள்ளங்கி சப்பாத்திதேவையான பொருட்கள்:முள்ளங்கி - 2கோதுமை மாவு - 1 கப்சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்ஓமம் - 1 டீ ஸ்பூ...
30/11/2015

முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2
கோதுமை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
ஓமம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

* துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீ­ர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.

முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல்தானே!

கோதுமைமாவு குழிப்பணியாரம்தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - ஒரு கப் உருளைக்கிழங்கு - 1 பெரிய வெங்காயம் - 1 பட்டாணி - கால் க...
25/11/2015

கோதுமைமாவு குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பட்டாணி - கால் கப்
மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும்.

* உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

* கோதுமை மாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

* உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.

Address

Madiwala
Bangalore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ancient Delicacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category