Biriyani Darbar

Biriyani Darbar A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting.

Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

09/09/2026

🌙 இரவு உணவின் மீள் ஆரம்பம்!

இன்றுமுதல் BIRIYANI DARBAR-இல் இரவு நேர உணவுகள் மீண்டும் ஆரம்பமாகின்றன! ❤️

மாலை 6.45 முதல் இரவு 8.45 வரை, இன்றைய ஆரம்பத்தில் எமது இடியப்பம், சொதி, சம்பல் மற்றும் கறி இணைந்த இரவு உணவு வகைகளை சிறப்பு விலையில் உங்களிடம் கொண்டு வருகின்றோம்.

✨ 10 இடியப்பம் + சொதி + சம்பல் + ஒரு கறி — ரூ.120/- முதல்!
🍗 கோழியிறைச்சிக் கறியுடன் — ரூ.450/-
🥘 ஆட்டிறைச்சிக் கறியுடன் — ரூ.650/-

இந்த சிறப்பு விலைகள் டேக் எவே மற்றும் டெலிவரிக்கு மாத்திரமே பொருந்தும்.

மேலும், தேங்காய்ப்பூ பெரிய ரொட்டி, கொத்து, இடியப்பக் கொத்து உள்ளிட்ட உணவு வகைகளும் இன்று முதல் மாலை 6.45 முதல் இரவு 8.45 வரை பெற்றுக்கொள்ளலாம்.

📞 டெலிவரிக்கு Xeat – 0775 207 752
டெலிவரிக் கட்டணம் தனியாக அறவிடப்படும்.

இன்றைய இரவை சுவையுடன் ஆரம்பிப்போம்…
உங்களுடன் மீண்டும் ஒரு அழகான இரவு! ❤️

அனைத்து உணவுகளும் கையிருப்பு உள்ளவரை மாத்திரமே.

டேக் எவே பைகளுக்கு ரூ.10 முதல் கட்டணம் அறவிடப்படும்.
டைன்-இன் உணவுகளுக்கு இந்தச் சிறப்புச் சலுகைக் கட்டணம் பொருந்தாது!

பிரியாணி தர்பார்
3ம் ஒழுங்கை
மின்சார நிலைய வீதி
யாழ்ப்பாண நகரம்

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

06/09/2026

மீண்டும் உங்களை இரவு சந்திக்கத் தயாராகின்றோம் 🌙

நீண்ட நாட்களுக்குப் பிறகு, "பிரியாணி தர்பார் - யாழ்ப்பாணம்" தனது இரவு நேர உணவகச் சேவையை மீண்டும் துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.

அதிகப்படியான உணவுகளாக இல்லாமல், எளிமையான அதேசமயம் எம்மால் முடிந்த வரையில் சுவையான சில முக்கிய உணவுகளை மட்டுமே உங்களுக்கு வழங்கவுள்ளோம். இடியப்பம் அதற்கு சிறந்த சொதி, சம்பலுடன் கறியும் மென்மையான பெரிய தேங்காய் ரொட்டி, முடிந்தால் பரோட்டா, அதற்கேற்ற சம்பல், பருப்பு, சிக்கன் மட்டண் மீன் கறிகள், மற்றும் ப்றைட் றைஸ் வகைகள், உண்மையில் சுவையான வெஜிடபள், சிக்கன், மட்டண், முட்டைக் கொத்து வகைகள், சூப் வகைகள் என உங்களின் இரவு உணவை நிறைவானதாக மாற்ற எங்களால்
முடிந்தவரையில் முயற்சிப்போம்.

எளிமையான உணவு, புன்னகை தரும் சுவை அதுவே எங்களின் நோக்கம்.

✨ மீள் ஆரம்ப நாள்: 09.09.2026

⏰ நேரம்: தினமும் மாலை 6:45 PM – இரவு 8:45 PM

📍 இடம்: பிரியாணி தர்பார், யாழ்ப்பாணம்.

விலைகளை அறிந்து கொள்ளத் தொடர்ந்து இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

💕

"Dinner is back. எளிமையான சுவையுடன் அன்போடு அழைக்கிறோம்!"

Biriyani Darbar
3rd Lane,
Power House Rd,
Jaffna Town
0713365151

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

05/09/2026

❤️ நான்கு ஆண்டுகள்… உங்கள் அன்புடன்!

பொழுது போக்கு வணிகமாக ஆரம்பித்து
10.10.2022 அன்று ஒரு சிறிய உணவுக் கூடமாக நெல்லியடியில் ஆரம்பித்து பின் காலத்தின் தேவை கருதி யாழ்நகரிற்கு இடம் மாறி இயங்கி வரும் எமது Biriyani Darbar நான்காம் ஆண்டை நிறைவு செய்யும் பயணத்தின் வாசலில் நிற்கிறது.

இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கலாம்…
ஆனால் மாறாத ஒன்று இருக்கிறது — எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவும். ❤️

நெல்லியடியில் முதல் நாளில் எம்மைத் தேடி வந்து பேராதரவை பேரன்புடனும் பேருவகையுடனும் வாரி வழங்கிய பலரிலிருந்து, இன்று எமது உணவைத் தொடர்ந்து தேடி வரும் பலர்வரை… ஒவ்வொரு வாடிக்கையாளரும் எமது பயணத்தின் ஒரு பகுதியாகவே மாறியிருக்கிறீர்கள்.

ஒரு சிறிய உணவுக் கூடமாகத் தொடங்கிய நாம், இன்று உங்கள் மதிய உணவுத் தேர்வுகளில் ஒரு நம்பிக்கையான அங்கமாக யாழ் நகரில் மெதுமெதுவாக வேரூன்றியிருக்கிறோம் என்று நம்புகிறோம்.

அதற்காக உங்களுக்கு நன்றி சொல்வது மட்டும் போதாது.
இந்த நான்கு ஆண்டுகளை உங்களுடனேயே கொண்டாட வேண்டும். ❤️

அதற்கான எமது சிறிய நன்றியாக, 12.09.2026 முதல் 11.10.2026 வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒரு சிறப்பான பிரியாணி Offer ஒன்றை உங்களுக்காக வழங்குகின்றோம். விபரங்களை விரைவில் வெளியிடுவோம்..

இது வெறும் ஒரு Offer இல்லை…
நான்கு ஆண்டுகளாக எம்முடன் பயணித்த உங்களுக்கு எமது அன்பின் ஒரு சிறிய வெளிப்பாடு.

நான்கு ஆண்டுப் பயணத்தை உறுதியாக நிறைவு செய்து,
ஐந்தாம் ஆண்டில்… நீங்களும் நாங்களும் மீண்டும் உறுதியாகக் கால் பதிக்கத் தயாராவதற்கு உங்கள் அதி புன்னகை நிறைந்த வதனங்களை நாங்கள் காண ஆரம்பிக்க வேண்டும் என்ற பேராசை. ❤️

ஆனந்தமாகத் தயாராவோம்…
நன்றியுடன் தொடர்வோம்…
உங்களுடன் இன்னும் பல ஆண்டுகள் பயணிப்போம் என நம்புகின்றோம்!

#புன்னகைOffer

🙏 என்றும் உங்கள் ஆதரவிற்கு நன்றி.

Biriyani Darbar
Million of Emotions ❤️

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

31/08/2026

🍽️ இன்று முதல் எமது புதிய மதிய உணவு விலைகள் அமுலில்!
Dine-in | Takeaway | Delivery, உங்கள் வசதிக்கேற்ற விலைகளுடன். ❤️

அன்பான வாடிக்கையாளர்களே ❤️

உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் அன்பிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இன்று முதல் Biriyani Darbar இன் மதிய உணவு வகைகளுக்கான புதிய விலைகள் நடைமுறைக்கு வருகின்றன.

உங்கள் வசதிக்காக Dine-in மற்றும் Takeaway / Delivery ஆகியவற்றிற்கான விலைகள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன. 🍽️ Dine-in:
உணவகத்தில் அமர்ந்து உணவருந்தும் வாடிக்கையாளர்களுக்கான விலைகள் தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
டேக் எவே மற்றும் டெலிவரி சிறப்பு விலைக்கழிவு விலைகளில் ஒரு வாடிக்கையாளர் நாள் ஒன்றிற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அதி கூடிய பொதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொலை பேசி வாயிலான ஓர்டர்கள் முற்பதிவு ஓர்டர்களிற்கு இந்த சிறப்பு சலுகை விலை பொருந்தாது.
(மேலும் நிபந்தனைகளிற்குட்பட்டது)
தவிர ஒருவர் ஒரு நாளில் பெறும் முதல் இரண்டு காய்கறி/மரக்கறி சோறு கறி பார்சலின் விலை மேலும் குறைக்கப்பட்டு 150 ரூபாயாக அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து Dine-in விலைகளுக்கும் 10% சேவைக் கட்டணம் (Service Charge) பொருந்தும்.

🛵 Delivery:
Delivery சேவையை Xeat மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
📞 0775 207 752 என்ற எண்ணில் Xeat-ஐ தொடர்புகொண்டு உங்கள் உணவையும் delivery கட்டணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

காவும் பைகளின் விலை 10 ரூபாயிலிருந்து அமையும்.

⏰ எமது தற்போதைய மதிய நேரம்:
முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை. விரைவில் இரவும்.

📌 முக்கிய குறிப்பு:
உணவுப் பொருட்களின் சந்தை விலை, மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் காலத்திற்கேற்ப எமது விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே, எதிர்காலத்தில் விலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எப்போதும் போல தரமான உணவு, நிறைவான அளவு, அன்பான சேவை ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவதையே எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம். ❤️

உங்களின் ஆதரவே எமது வளர்ச்சிக்கான மிகப்பெரிய பலம்.
மீண்டும் ஒருமுறை நன்றி! 🙏

வழமை போல் தம் பிரியாணி மற்றும் கொத்து வகைகளும் உண்டு.

Biriyani Darbar
Million of Emotions ❤️
3ம் ஒழுங்கை
மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாண நகரம்.

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

29/08/2026

Prawn Rice & Curry —
#அறிமுகம்
2-3 பெரிய இறால்கள், மணம் கமழும் வெள்ளைச் சோறு, இறால் குழம்பு மற்றும் மூன்று விதமான காய்கறிக் கறிகளுடன்… ❤️

ஒரு வாழையிலையில் நிறைவான உணவும், மனதிற்கு மகிழ்ச்சியான ஒரு சாப்பாட்டு அனுபவமும்!

🔥 வழக்கமான விலை – ரூ.1,450
✨ Takeaway & Deliveryக்கு மாத்திரமான சிறப்பு விலை – ரூ.850 மட்டும்!

📍 Biriyani Darbar
⏰ மதியம் 11.30 AM – 3.15 PM

🛵 Delivery வேண்டுமா?
Xeat – 0775 207 752

Delivery charges தனியாக.

⚠️ குறிப்பு: சந்தை விலை மற்றும் கிடைக்கும் இருப்பு (stock availability) ஆகியவற்றைப் பொறுத்து, எதிர்காலத்தில் இறால்களின் அளவு மற்றும் எண்ணிக்கை மாறுபடலாம்.

🍽️ Dine-in-க்கு 10% Service Charge பொருந்தும்.

இன்று வாங்கி சுவைத்துப் பாருங்கள்…
மனம் நிறைந்த ஓர் நல்ல உணவை எடுத்துச் செல்லுங்கள். ❤️

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

26/08/2026

இன்று அறிமுகமாகும் எமது மீன் சோறு & கறி சிறப்பு விலை, டேக் எவே மற்றும் டெலிவரி சேவைகளுக்கு மாத்திரமே பொருந்தும்.

சிறப்பு விலை – ரூ.350 மட்டும்!

மீன் வகைகள் மற்றும் சந்தை விலைகளுக்கு ஏற்ப, இச்சிறப்பு விலை மற்றும் உணவு வகைகளில் அவ்வப்போது தற்காலிக மாற்றங்கள் ஏற்படலாம்.

🚗 டெலிவரி:
டெலிவரி கட்டணம் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து தனியாக அறவிடப்படும். மேலதிக விபரங்களுக்கு Xeat – 077 520 7752 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

📦 சிறப்பு விலை சலுகை:
சிறப்பு விலையில் ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சோறு & கறி டேக் எவே / டெலிவரி பார்சல்களும் அதிகபட்சம் 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

6 பார்சல்களுக்கு மேற்பட்டவை வழமையான விலையில் வழங்கப்படும்.

உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் மிக்க நன்றி. ❤️

பிரியாணி தர்பார்
3ம் ஒழுங்கை,
மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாண நகரம்.

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

26/08/2026

வணக்கம்! ❤️

எமது மதிய சோறு கறி உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கடந்த சில மாதங்களாக எமது டேக் எவே பார்சல்களுக்கு விசேட விலைக் குறைப்புகளை வழங்கி வருகின்றோம். உங்களது பேராதரவும் வரவேற்பும் எமக்கு தொடர்ந்து உற்சாகம் அளித்து வருகின்றது. 🙏

அதன் தொடர்ச்சியாக, ஆவணி 31 ஆம் திகதி முதல் எமது டேக் எவே விலைகளில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்துகின்றோம்.

🌿 வெஜிடபள் சோறு & கறி – ஒருவர் ஒரு நாள் பெறக்கூடிய முதல் 2 டேக் எவே பார்சல்கள் தலா ரூ.150 ஆக விலை குறைக்கப்படுகின்றது!

ஒரு பெட்டியில் வெள்ளைச் சோறு, 4 மரக்கறிக் கறிகள் மற்றும் குழம்பு தனியாக வழங்கப்படும்.

மேலும், டேக் எவே சோறு கறி பார்சல்களுக்கு தற்போது வழங்கப்படும் சலுகை விலையில், ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளில் அதிகபட்சம் 6 பார்சல்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த 6 பார்சல்களில் முதல் 2 வெஜிடபள் பார்சல்கள் தலா ரூ.150 என்ற சிறப்பு விலையிலும், ஏனைய பார்சல்கள் நடைமுறையில் உள்ள சலுகை விலையிலும் வழங்கப்படும்.

மற்ற மதிய சோறு கறி டேக் எவே பார்சல்களின் விலைகளில் ரூ.20 முதல் ரூ.50 வரையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேவேளை, எமது டைன்-இன் விலைகளில் சில குறைப்புகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதற்கான முழுமையான விபரங்கள் விரைவில் வெளியாகும்.

🐟 மேலும், மீன் சோறு கறி அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து நண்டு, கணவாய் மற்றும் இறால் சோறு கறிகளையும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளோம். ❤️

🍛 இவற்றுடன், எமது தினசரி பிரியாணிகள், மஞ்சள் சோறு மதிய உணவுகள் மற்றும் தனித்துவமான கொத்து வகைகளும் தொடர்ந்து கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை:

• சோறு கறி டேக் எவே சலுகைகள் தினசரி கையிருப்பு உள்ளவரை மட்டுமே வழங்கப்படும்.
• சலுகை விலையில் ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளில் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச டேக் எவே பார்சல்கள் 6 ஆகும்.
• தொலைபேசி மூலம் ஓர்டர்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறை தற்போது ஆரம்பிக்கப்படவில்லை.
• குறைந்தது 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பெரிய அளவிலான ஓர்டர்களுக்கு, வழக்கமான (உண்மையான / Offer விலை இல்லாத) விலையிலிருந்து சிறப்பு விலைகள் வழங்கப்படலாம்.

• அனைத்து சலுகைகளும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பதுடன், தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றப்படலாம்.

🕦 தற்போதைய திறப்பு நேரம்:
தினமும் காலை 11.30 மணி முதல் மாலை 3.15 மணி வரை.

🌙 விரைவில் மீண்டும் இரவு நேர சேவையையும் ஆரம்பிக்க உள்ளோம்.
அதனுடன் சில சுவாரஸ்யமான இரவு உணவு சலுகைகளும் அறிமுகமாகவுள்ளன. எமது Facebook பக்கத்துடன் இணைந்திருங்கள்!

🚗 டெலிவரி:
டெலிவரி சேவைகளுக்கு Xeat – 077 520 7752 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.

டெலிவரி கட்டணம் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து தனியாக அறவிடப்படும்.

📍 பிரியாணி தர்பார்
3ம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாண நகரம்.

உங்கள் ஆதரவும் அன்பும் எமது வளர்ச்சிக்கான மிகப்பெரிய பலம். ❤️
பிரியாணி தர்பார் — சுவையும் தரமும் எங்கள் வாக்குறுதி.

நாங்கள் ஒரு சிறிய அளவிலான பிரியாணி உணவகம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

🙏🏻

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

21/08/2026

ஐஞ்சு நாள் தாங்காது என்றார்கள்..
ஒரு மாதம் தாங்காது என்றார்கள்..

44 Days and Counting!

குறிப்பு:
வெஜ் சோறு கறி படத்திலுள்ளது போலில்லாமல் வெள்ளை சோற்றுடன் 4 கறிகள் ஒரு பெட்டியினுள் வைத்து வழங்கப்படும். குழம்பு தனியாக வழங்கப்படும்.

தினமும் கையிருப்பு உள்ளவரை

நிபந்தனைகளுடன் மேலும் விலைக்குறைப்பு அறிவிப்பு விரைவில் உள்ளது..

அன்புடன் இணைந்திருங்கள்!
அன்பு கொண்டவர்கள் மாத்திரம் இணைந்திருங்கள்!

பிரியாணி தர்பார்
3ம் ஒழுங்கை
மின்சார நிலைய வீதி
யாழ்ப்பாண நகரம்.

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

20/08/2026

Big congratulations to our good friend and dedicated well wisher, Thiruchelvam Kartheepan, on the Grand Opening of the Abans Showroom in Nelliady! 💐✨

From endless great conversations and shared memories in Nelliady to watching you take on this prestigious role, we couldn't be prouder. Wishing you unbounded success and prosperity as you lead the new team!

Join us in celebrating his big day tomorrow at 9:30 AM! 🎉

077 576 7555

A 'small-scale', affordable authentic 'biriyani spot', in the center of Jaffna Town. Now serving you in a simple classic Dine in setting. Open 12Pm - 4Pm
📦 Takeaway 0713365151
🛵 Delivery 0775207752
🍽 Simple Dine-in
3rd Lane, Power House Rd, Jaffna Town

Address

3rd Lane
Jaffna

Opening Hours

Monday 11:30 - 15:15
18:45 - 20:45
Tuesday 11:30 - 15:15
18:45 - 20:45
Wednesday 11:30 - 15:15
18:45 - 20:45
Thursday 11:30 - 15:15
18:45 - 20:45
Friday 11:30 - 15:15
18:45 - 20:45
Saturday 11:30 - 15:15
18:45 - 20:45
Sunday 11:30 - 15:15
18:45 - 20:45

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biriyani Darbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share