JNR Cakehouse_The art of taste

JNR Cakehouse_The art of taste Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JNR Cakehouse_The art of taste, Restaurant, Batticaloa.

எனக்கான ஒரு பயணம்…எனக்கே எனக்கான ஒரு தனிப்பயணம்…யாரையும் தொந்தரவு செய்யாமல்,யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல்,யாருக்கும...
21/08/2026

எனக்கான ஒரு பயணம்…
எனக்கே எனக்கான ஒரு தனிப்பயணம்…

யாரையும் தொந்தரவு செய்யாமல்,
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல்,
யாருக்கும் விளக்கம் சொல்லாமல்…

என் மனம் விரும்பிய இடங்களுக்குச் சென்று,
என் மனதோடு மட்டும் பேசிக்கொண்டு,
என்னை நானே புரிந்துகொள்ளும்
ஒரு அமைதியான பயணம்.

சில நேரங்களில் வாழ்க்கையில்
யாரையும் தேடாமல் இருப்பதுதான்
நம்மை நாமே தேடிக் கண்டுபிடிக்கும்
மிக அழகான பயணம்.

இந்தப் பயணம்…
எனக்காக மட்டும்.

மனதின் சிறையிலிருந்து விடுதலை…மிகவும் கொடுமையான சிறைச்சாலைஉனது மனதிற்குள் தான் இருக்கிறது…அதிலிருந்து உன்னை விடுவித்துக்...
21/08/2026

மனதின் சிறையிலிருந்து விடுதலை…

மிகவும் கொடுமையான சிறைச்சாலை
உனது மனதிற்குள் தான் இருக்கிறது…
அதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்ளக் கற்றுக்கொள்.

மனம் தளரும்போது தான்,
ஆன்மா சங்கிலிகளால் பிணைக்கப்படுகிறது.

உன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்கு
அடிமையாக இருக்கப்போவதில்லை என்று
நீ எப்போது முடிவு செய்கிறாயோ…

அந்த நொடியே
உனது சுதந்திரம் தொடங்குகிறது.

உன் மனதை விடுவி…
உன் வாழ்க்கையும் மாறத் தொடங்கும்.

தானே அழுது தானே ஆறுதல் தேடும்... இதைவிட பெரிய தண்டனை எதுவுமே இல்லை
20/08/2026

தானே அழுது தானே ஆறுதல் தேடும்... இதைவிட பெரிய தண்டனை எதுவுமே இல்லை

சில மனிதர்களை இழப்பது இழப்பு அல்ல…சில நேரங்களில் வாழ்க்கை நம்மைச் சுற்றியிருக்கும் சில மனிதர்களை விலக்கிவிடுகிறது.அப்போத...
19/08/2026

சில மனிதர்களை இழப்பது இழப்பு அல்ல…

சில நேரங்களில் வாழ்க்கை நம்மைச் சுற்றியிருக்கும் சில மனிதர்களை விலக்கிவிடுகிறது.

அப்போது நமக்கு வலிக்கும்…
“நான் என்ன தவறு செய்தேன்?” என்று மனம் கேட்கும்…

ஆனால் காலம் கடந்த பிறகு புரியும்…

சிலரை இழந்ததால்தான்
நம்மை நாமே மீண்டும் கண்டுபிடித்தோம் என்று.

எல்லோரையும் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.
எல்லோரிடமும் நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

நம்முடைய மன அமைதியை காப்பாற்றிக் கொண்டு,
நம்முடைய பாதையில் அமைதியாக முன்னேறுவதே
சில நேரங்களில் மிகப்பெரிய வெற்றி.

விலகிச் சென்றவர்கள் விலகியே இருக்கட்டும்…
நம்மை மதிப்பவர்கள் மட்டும் நம்முடன் இருக்கட்டும்.

அமைதியாக முன்னேறுங்கள்.
ஒருநாள் உங்கள் அமைதியே
உங்களுக்கான மிகப்பெரிய பதிலாக இருக்கும்.

"பணம் இல்லாமல் அன்பு வாழுமா? அன்பு இல்லாமல் பணம் வாழுமா? உங்கள் பதில் என்ன?"
06/08/2026

"பணம் இல்லாமல் அன்பு வாழுமா? அன்பு இல்லாமல் பணம் வாழுமா? உங்கள் பதில் என்ன?"

பெண்களை மதிப்பது என்றால் என்ன?ஒரு பெண்ணை மதிப்பது என்பது அவளுக்கு மரியாதையான வார்த்தைகளை மட்டும் கொடுப்பது அல்ல… அவள் ஒர...
05/08/2026

பெண்களை மதிப்பது என்றால் என்ன?

ஒரு பெண்ணை மதிப்பது என்பது அவளுக்கு மரியாதையான வார்த்தைகளை மட்டும் கொடுப்பது அல்ல… அவள் ஒரு தனி மனிதர் என்பதை மனதார ஏற்றுக்கொள்வது.

அவளின் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் வலியையும், அமைதிக்குள் இருக்கும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதே உண்மையான மரியாதை.

அவள் பேசும்போது கேட்பது, அவள் உணர்வுகளை அலட்சியம் செய்யாமல் மதிப்பது, அவள் விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் இடம் கொடுப்பது… இதுவே அவளை மதிப்பது.

ஒரு பெண்ணின் அழகை மட்டும் பாராட்டுவது எளிது… ஆனால் அவளின் மனதை, போராட்டங்களை, பொறுமையை, தியாகங்களை புரிந்து கொள்வதுதான் உண்மையான பாராட்டு.

அவள் “இல்லை” என்று சொன்னால் அதை மதிப்பதும், அவள் தனக்கான முடிவுகளை எடுக்கும்போது அதை ஏற்றுக்கொள்வதும், அவளின் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் காப்பதும் ஒரு உண்மையான மனிதனின் பண்பு.

ஒரு பெண் வீட்டில் இருந்தாலும், வேலை செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும்… அவள் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு பெண்ணை மதிப்பது என்பது அவளை தேவதை போல வைத்து வணங்குவது அல்ல…
அவள் ஒரு மனிதர் என்பதை உணர்ந்து, அவளுடன் சமமாக அன்புடனும் மரியாதையுடனும் நடப்பதே உண்மையான மதிப்பு.

ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்தாமல் காப்பவன் தான் உண்மையில் அவளை மதிக்கத் தெரிந்தவன்.

பதப்படுத்தியவர்கள்...ஆரம்பத்தில் அவள் பயந்தாள்...சமூகத்திற்கு பயந்தாள்...குடும்பத்திற்கு பயந்தாள்..."மற்றவர்கள் என்ன சொல...
04/08/2026

பதப்படுத்தியவர்கள்...

ஆரம்பத்தில் அவள் பயந்தாள்...

சமூகத்திற்கு பயந்தாள்...
குடும்பத்திற்கு பயந்தாள்...
"மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?" என்ற கேள்விக்கே வாழ்ந்தாள்.

அவளை உடைக்க நினைத்தார்கள்...
அவளை அழ வைக்க நினைத்தார்கள்...
அடிமேல் அடி கொடுத்தார்கள்...

ஆனால்...

அவர்கள் அறியாத ஒரு விஷயம் இருந்தது.

அவள் உடையவில்லை...
ஒவ்வொரு அடியும் அவளை பலப்படுத்தியது.

ஒரு நாள் அவள் முடிவு செய்தாள்...

"நடப்பது நடக்கட்டும்...
வருவது வரட்டும்...
நான் எதிர்கொள்கிறேன்!"

அந்தத் துணிவைக் கற்றுக் கொடுத்தது,
அவளை பதப்படுத்தியவர்கள்தான்.

அதே நேரத்தில்,
ஒன்று... இரண்டு... நல்ல உள்ளங்கள்
அவள் கையைப் பிடித்து சொன்னார்கள்...

"நிமிர்ந்து நில்...
உன்னால் முடியும்...
பயப்படாதே..."

அந்த வார்த்தைகளே
அவளின் தன்னம்பிக்கையாக மாறின.

இன்று...

அவளைப் பார்த்து அவளே சிரித்துக் கொள்கிறாள்.

"சபாஷ்...!
நீ கட்டிக்காரி...!
இப்படியே வளர்ந்து கொண்டே போ..."

இப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது...

பொறாமை கொண்டவர்கள்
அவளை வீழ்த்தவில்லை...
அவளை உருவாக்கினார்கள்.

அவர்களை நேசிக்க வேண்டிய அவசியமில்லை...

ஆனால்...

அவர்கள் இல்லையென்றால்,
இன்று இவ்வளவு வலிமையான "நான்" இருந்திருக்க மாட்டேன்.

சிலர் நம்மை காயப்படுத்த வருகிறார்கள்...

ஆனால்...

இறைவன் அவர்களை,
நம்மை பதப்படுத்த அனுப்பியிருக்கிறார். 🤍

A positive mind creates a powerful life.Believe in yourself every single day.
30/07/2026

A positive mind creates a powerful life.
Believe in yourself every single day.

எங்களை மாற்ற வேண்டாம் எங்களுக்கான இடத்தில் உருவாக்குகள் Don't changes us..... Create a space for us
28/07/2026

எங்களை மாற்ற வேண்டாம் எங்களுக்கான இடத்தில் உருவாக்குகள்

Don't changes us..... Create a space for us

நாங்களும் இந்த உலகின் ஒரு அழகான நிறம்.We are a beautiful colour of this world.
28/07/2026

நாங்களும் இந்த உலகின் ஒரு அழகான நிறம்.

We are a beautiful colour of this world.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when JNR Cakehouse_The art of taste posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category